தமிழ்நாடு

”ஜனநாயகத்தை நம்பாமல் பயந்து போய் இருக்கும் பாஜக” : கனிமொழி MP விமர்சனம்!

எல்லோரையும் மிரட்டி ஆட்சியை தக்கவைக்க பாஜக முயற்சி செய்கிறது என கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார்.

”ஜனநாயகத்தை நம்பாமல் பயந்து போய் இருக்கும் பாஜக” : கனிமொழி MP விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். தூத்துக்குடி வடக்கு தி.மு.க மாவட்டம் சார்பாக இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது.

காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தார். இதில் கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,""பா.ஜ.க தன் மீது விமர்சனம் வைக்கக் கூடிய, எதிர்க்க கூடிய அரசியல் தலைவர்களை அடக்கி விடலாம் என்று நினைக்கின்றனர். இன்று இரண்டாவது முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லோரையும் மிரட்டி பா.ஜ.க ஆட்சியை தக்கவைக்க முயற்சி செய்கிறது. பா.ஜ.க பயந்து போய் இருக்கிறது. அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை.

மார்ச் 26 ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். இதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்நலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் என்னை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories