தமிழ்நாடு

”பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்” : கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சாடல்!

பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சாடியுள்ளார்.

”பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்” : கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராகக் கணபதி ராஜ்குமார் களமிறங்குகின்றார். இந்நிலையில் சிங்காநல்லூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய டி.ஆர்.பி ராஜா,"இந்திய அளவில் தமிழ்நாடு தனித்துவம் மிக்க மாநிலமாக திகழ்கிறது. இது வடக்கில் இருப்பவர்களுக்குப் புரியவில்லை. இந்த தேர்தலைப் பொறுத்தவரை வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கடைசி பத்து நாட்கள் வேலை செய்தால் போதும் என நினைக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் உதய சூரியனை கொண்டு சேர்க்க வேண்டும். ஏன் தி.மு.க பக்கம் நிற்க வேண்டும், முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் ஏன் நிற்க வேண்டும் என்பதை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் எதற்காக பா.ஜ.கவை ஆதரிக்கக் கூடாது என்பதைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைக் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழையே ஒழிக்க வேண்டும் என துடிக்கும் பா.ஜ.கவை ஒழிக்க வேண்டிய தேர்தல் இது.

கோவைக்கு வந்து பிரதமர் எதை பரப்ப வேண்டும் என நினைக்கிறார். கலவரத்தில் மட்டும் தான் இந்த புழுக்கள் வாழமுடியும். நம்மைப் பிரிக்க வேண்டும் என்பது தான் இந்த புழுக்களின் எண்ணம். இது தேர்தல் அல்ல, போர். ஒவ்வொரு நாளும் களமாடி வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories