தமிழ்நாடு

”வாரத்திற்கு 3 நாள் தமிழ்நாட்டிற்கு மோடியை வரவைத்த தேர்தல் ஜுரம்” : கனிமொழி MP பேச்சு!

தோல்வி பயத்தால் பிரதமர் வாரத்திற்கு 3 நாள் தமிழ்நாட்டிற்கு வருகிறார் என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

”வாரத்திற்கு 3 நாள்  தமிழ்நாட்டிற்கு மோடியை வரவைத்த தேர்தல் ஜுரம்” : கனிமொழி MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க சார்பில் இரண்டாவது முறையாக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார்

இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று தூத்துக்குடி 2 - ம் கேட் அருகிலுள்ள அபிராமி மஹாலில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய கனிமொழி, " மகளிருக்கு புதுமைப்பெண் திட்டம் என்று அந்தத் திட்டத்தின் வழியாக உயர்கல்வி படிக்க கூடிய பெண்களுக்கு நம்ம வீட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம். மகளிருக்கு இலவச பேருந்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை என்று அறிவித்து ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மேல நம்முடைய சகோதரிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க கூடிய அந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் நமக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் பேசும்பொழுது சொன்னார். நான் வாரத்துக்கு நான்கு நாள் தூத்துக்குடி தொகுதியில் இருக்கிறேன் என்று. இப்பா எல்லாம் பார்த்தீங்கன்னா பிரதமர் மோடி வந்து தமிழ்நாட்டில்தான் வாரத்துக்கு மூன்று நாள் இருக்காரு, அதனை நாள் பாராளுமன்றத்திற்குக் கூட போவதில்லை தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார். ஏனென்றால் தேர்தல் பயம் வந்துடுச்சு, தேர்தல் ஜுரம் வந்துடுச்சு. இதனைத் தடவை வறீங்களே ஒட்டு வாங்க வேண்டும் என்று.

”வாரத்திற்கு 3 நாள்  தமிழ்நாட்டிற்கு மோடியை வரவைத்த தேர்தல் ஜுரம்” : கனிமொழி MP பேச்சு!

எங்களுடைய மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்டப்பட்ட போது வீடுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த பொழுது, தான் சேர்த்து வைக்கக் கூடிய அத்தனை சொத்துக்களும் வீட்டில் இருக்கிற அத்தனை பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போது, வாழ வழி எல்லாம் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தவித்து நின்று கொண்டிருந்த பொழுது சென்னையிலும் சரி, தூத்துக்குடியிலும் சரி இப்படிப் பரிதவித்த அந்த மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல ஒரு முறையாவது வந்தாரா? இல்லை. இதுவரைக்கும் இங்கே தரப்பட்ட இருக்கக்கூடிய அதனை நிவாரணத்தையும் தந்தது நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

இங்க இருக்கக் கூடிய பிரதமர், ஒன்றிய அரசாங்கமும் வந்து பாத்துட்டு போன அமைச்சர்களும் மக்களுக்காக டெல்லியிலிருந்து ஒரு ரூபா கூட தரவில்லை, நம்ம கிட்ட இருந்து வசூல் பண்ண காசு ஜிஎஸ்டி போட்டு, இங்கே வரி போட்டு நம்மிடம் இருந்து வசூல் பண்ண காசு நமக்காக செலவழிக்கவில்லை, நம்முடைய மக்களுக்கு செலவழிக்கவில்லை. வீடு கட்டிக் கொடுத்தது முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது முதலமைச்சர், ஆடு மாடுகளுக்கு நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சர். வயலில் எல்லா பயிர்களும் வீணாகிவிட்டது என்று கண்ணீரோடு நின்ற விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டியது நம்முடைய முதலமைச்சர்.

அதனால், திரும்பத் திரும்ப இங்கே வந்து தமிழ்நாட்டில் ஒரு கால் வைத்து விட வேண்டும் என்று அந்த எண்ணத்தோடு பிரதமரை திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டு வராங்க ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கண்ணீரோடு நின்ற பொழுது நீளாத அந்தக் காரத்திற்கு, இன்று தமிழக மக்கள் தன்னுடைய விரல்களை நீட்டி வாக்களிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், புரிய வைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories