தமிழ்நாடு

பொன்முடி பதவியேற்பு விவகாரம் : ஆளுநருக்கு நாளை வரை கெடு வைத்த உச்சநீதிமன்றம்!

அமைச்சராக பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொன்முடி பதவியேற்பு விவகாரம் : ஆளுநருக்கு நாளை வரை கெடு வைத்த உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார். இதைத் தொடர்ந்து அமைச்சராக க.பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் ஆளுநர் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவியேற்பு செய்ய முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங், "பொன்முடி 9 முறை அமைச்சராக இருந்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் ஆளுநர் அவரை அமைச்சராகப் பதவியேற்க மறுக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என வாதிட்டார்.

கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று முதலமைச்சர் பரிந்துரைக்கும் போது அதை ஏற்க ஆளுநர் மருத்துள்ளார் என்றும் அபிஷேக் சிங் வாதிட்டார்.

இதையடுத்து அமைச்சராக பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories