தமிழ்நாடு

”பா.ஜ.க ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பா.ஜ.க ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”பா.ஜ.க ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்ச் 15 ஆம் தேதியை இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக 2022 ஆம் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில் பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இசுலாமியர் மீதான வெறுப்பைச் சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.

இசுலாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories