தமிழ்நாடு

”பேச்சில் நாகரிகம் வேண்டும்” : குஷ்புக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம்!

குஷ்பு பேச்சுக்கு நடிகை அம்பிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

”பேச்சில் நாகரிகம் வேண்டும்” : குஷ்புக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

அதிலும் கலைஞர் உரிமைத் தொகை மூலம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டமானது நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்துக்கொண்டனர். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணத்தை பெண்கள் தங்கள், தங்கள் குழந்தைகள், வீட்டுக்கு தேவையான சிறுசிறு பொருட்களை கூட வாங்கிக்கொள்ள முடியும். பலரும் பாராட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ 'பிச்சை' என்று கூறி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் குஷ்புவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை அம்பிகாவும் குஷ்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், "உதவி செய்தாலும் மக்களுக்கு நன்மை செய்தாலும் ஆதரிக்க வேண்டும். ஆதரிக்க விருப்பமில்லை எனில் எதையும் சொல்லாமல் இருக்க வேண்டும். அவமதிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது. 'பிச்சை' என ஏன் சொல்ல வேண்டும். ஐந்து ரூபாய் என்றாலும் அது ஒரு உதவிதான்." என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories