தமிழ்நாடு

“40 தொகுதிகளிலும் 5 லட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“40 தொகுதிகளிலும் 5 லட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் பேசியதாவது, “திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தற்காலிக பணிகளை நியமனம் செய்ய வேண்டும் என இருந்த சூழ்நிலையில் மின் தூக்கிகளில் மாற்றுத்திறனாளிகளை பணி நியமனம் செய்து இயக்கப்படுகிறது. இதே போன்று பல்வேறு மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

“40 தொகுதிகளிலும் 5 லட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நான் மேயராக இருந்தபோது தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஓர் சிறப்பு பள்ளியினை தொடக்கி வைக்கப்பட்டது. தசை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிரத்யேகமான பள்ளிகளாக இந்தியாவில் முதல் முறையாக சிறப்பு பள்ளி இயக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி கிட்டும்படி திமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு நான் ஒரு பாலமாக இருப்பேன். விடுபட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகி அலுவலகத்திற்கு செல்வது மகிழ்ச்சி அதற்கு நான் பாலமாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் பேசியதாவது, “ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 165 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இரு கால்களும் பாதிக்கப்பட்ட 140 பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. முதுகுத் தண்டுவடம், தசை சிதைவு நோயால் பாத்திக்கப்பட்ட 13 பயனாளிகளுக்கு மின்சார வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண உதவித்தொகை 8 கிராம் தங்க நாணயம் 12 இணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“40 தொகுதிகளிலும் 5 லட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திமுக அரசு பொறுப்பேற்று 34 மாதங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 அரசாணைகள் போடப்பட்டுள்ளது. இதுபோல வேறு எந்த மாநில அரசும் அரசாணைகள் வெளியிட்டதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1000 லிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதோடு கடும் பாதிப்புக்கு ஆளான மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 லிருந்து 2000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது போல மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத இறந்த உடல்களை மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறாய்விற்கு அனுப்புவது சரியாக இருக்காது. 72 மாற்றுத்திறனாளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எடுத்து வருகிறார்.

தேர்தல் பணிகளை திமுக எப்போதோ தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி படு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த முறை திமுக இரண்டு தொகுதிகளில் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

banner

Related Stories

Related Stories