தமிழ்நாடு

ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு!

ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் வேலையின்மை போக்க காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "1.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலி இடங்கள் நிரப்பப்படும். 2.அரசு நடத்தக்கூடிய தேர்வுகளிலே கேள்வித்தாள் கசிவுகள் தடுத்து நிறுத்தப்படும். 3.பயிற்சியாளர்களுக்கான சட்டம் கொண்டு வருவோம். தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனம் இரண்டுமே கட்டாயமாகப் பயிற்சியாளர்களை பணிக்கு வைக்க வேண்டும்.ஒரு வருடம் பயிற்சியில் 1 லட்சம் ரூபாய் ஸ்டைப்பின் தர வேண்டும். 4. ஸ்விக்கி, zomoto-வில் பணிபுரியும் இளைஞர்களுக்காக ஒரு சட்டம் கொண்டு வந்து சமூக பாதுகாப்பு வழங்கப்படும்.5, இளைஞர்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்க ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த 5 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள GST சட்டம் பிழையான சட்டம். GST சட்டத்தைத் திருத்த வேண்டும். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உடந்தையாக பாரத் வங்கி செயல்படுவது உகந்ததல்ல. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி வருகையால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என தெரியவில்லை. பிரதமர் மோடியை பார்த்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி ஏன் இன்னும் தொடங்கவில்லை என பிரதமரிடம் கேள்வி கேட்க வேண்டும். ஒரு வாக்குறுதிகளைக் கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories