தமிழ்நாடு

“இந்த பெண்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன? - இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?” - சீறும் பெண்கள்!

இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன என சமூக வலைதளங்களின் பெண்கள் எழுப்பிய கேள்விகளின் தொகுப்பை கீழே காணலாம்.

“இந்த பெண்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன? - இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?” - சீறும் பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி நாட்டில் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறி சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை வெளியிடும் போது, பெண்களுக்கு இது மகளிர் தின பரிசு என்றார்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தடுக்க ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மோடி அறிவித்த இந்த விலை குறைப்பு உண்மையான பரிசா? நாட்டு மக்கள் இதுகுறித்து என்ன தெரிவிக்கிறார்கள்? மோடி ஆட்சி பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான பரிசு எது? இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவ்வாறு உள்ள பல கேள்விகளுக்கு மோடி அரசு பதில் அளிக்குமா? என சமூக வலைதளங்களின் பெண்கள் எழுப்பிய கேள்விகளின் தொகுப்பை கீழே காணலாம்.

“இந்த பெண்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன? - இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?” - சீறும் பெண்கள்!

மணிப்பூர் பெண்களுக்கு மோடி கொடுத்த பரிசு என்ன?

மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் குறிப்பிட்ட பழங்குடியின சமூக பெண்கள் பெரிய அளவில் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட, அம்மாநில பெண்கள் தாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி நாட்டையே உருக்கியது. இரட்டை இன்ஜின் ஆட்சியை நடத்தி வருவதாக சொல்லும் பாஜக ஏன் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது?. ஏன் மோடி ஒரு முறைகூட மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்க நேரில் செல்லவில்லை? மணிப்பூர் பெண்களுக்கு மோடி கொடுத்த பரிசு என்ன?

மல்யுத்த வீராங்கனைகளுக்கு மோடி கொடுத்த பரிசு என்ன?

இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள், கடந்த 6 மாதங்களாக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்டப்போராட்டங்களை நடத்தி விட்டனர். இந்த பிரச்சனையில் பாஜக வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இதில் பிரதமர் மோடியின் நிலைபாடு என்ன?, பிரிஜ் பூஷன் சரண் சிங்கை மோடியின் குடும்ப உறுப்பினராக மோடி கருதுகிறாரா? போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மோடி கொடுத்த பரிசு என்ன?

“இந்த பெண்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு என்ன? - இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா?” - சீறும் பெண்கள்!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு!

சாமானிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசிய கட்டுப்படுத்த எந்த திட்டமும் மோடி அரசு கொண்டுவராதது ஏன்?

பெண்களை பணியில் அமர்த்த திட்டம் உள்ளதா?

நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை செயல்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? குறிப்பாக பெண்களை பணியில் அமர்த்த சிறப்பு திட்டம் எதாவது மோடி அரசு கொண்டுவந்துள்ளதா?

முகத்தை காட்டுவதற்கு இதுதான் களமா?

பெண் சிசுக்கொலையை தடுத்தல் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தும் `பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' யோஜனா என்ற திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள திட்டத்தில் மோடி விளம்பரம் மட்டுமே செய்வது மனிதநேய செயலா? மோடி விளம்பரத்தில் தனது முகத்தை காட்டுவதற்கு இதுதான் களமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories