தமிழ்நாடு

தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் பா.ஜ.க வெற்றி பெறாது : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அதிரடி!

தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் பா.ஜ.க வெற்றி பெற முடியாது அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் பா.ஜ.க வெற்றி பெறாது : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆலந்தூரில் ரூ.18.64 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சென்னையில் முதன் முறையாக அதி நவீன வசதிகளுடன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு அடிக்கடி வருகிறார். ஆனால் மக்கள் வெள்ளத்தில் பாதித்த போது மோடி வந்தாரா?. வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காக ரூ.38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

ஆனால் அவர்கள் ஒத்த நய பைசா கூட வழங்கவில்லை. இருந்தும் மக்களுக்கு ரூ.600 நிவாரண நிதி வழங்கியது தமிழ்நாடு அரசு. பெரியார், திருக்குறள் பற்றி எல்லாம் பேசும் மோடி மக்கள் பாதிக்கும் போது வந்து ஆறுதல் சொன்னது உண்டா?. இப்போது மோடி ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

மோடி தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறாது. 40 இடங்களிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories