தமிழ்நாடு

“பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்...” - எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி !

“பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்...” - எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை சைதாப்பேட்டை தேரடியில் சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி திமுக சார்பில் கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி திராவிட மாடல் - தேசத்தின் விடியல் வாழ்த்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைதை கிழக்கு பகுதி செயலாளர் இரா.துரைராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களை குழு தலைவரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழக்கறிஞர் அருள்மொழி, மதிமாறன், ஈரோடு சத்தியவாதி, நாகலட்சுமி ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் சிறப்புரையாற்றினர்.

அப்போது மேடையில் திருச்சி சிவா எம்.பி பேசியதாவது, “நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நமது கழகத் தலைவர் ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் எந்த காரணத்தை காட்டிலும் பாஜக வெற்றி பெற்று விட கூடாது. 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது இதுவரை இந்தியாவில் நடந்த தேர்தல் போல் இருக்காது. பாஜக வெற்றி பெற்றால் ஒரே கட்சி தான், ஒரே மதம் தான் என்று அனைத்தையும் ஒற்றை என்று கொண்டு வர பார்க்கிறார்கள்.

“பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்...” - எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி !

இந்த இயக்கம் தோன்றிய காரணத்தினால்தான் பக்கத்தில் இருப்பவர் எந்த ஜாதி என்று கேட்பதில்லை. தமிழ்நாடு மக்கள் சிந்திக்க வேண்டிய நாள் தான் தேர்தல் நாள். சந்திரயான் வெற்றிக்கு காரணம் மயில்சாமி அண்ணாதுரை, நிகர்சாஜி, வீரமுத்துவேல் இவர்கள்தான் என்று நாடாளுமன்றத்தில் பேசினோம். எல்லாம் தமிழ்நாட்டில், தமிழ் வழியில் படித்தவர்கள். அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் தெரியாது. இந்தி தெரியாமல் அவர்கள் சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

தந்திரமாக எல்லோரும் பாதிக்கக் கூடிய வகையில் பாஜக சட்டத்தை இயற்றியுள்ளது. சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மசோதா நிறைவேற்றினால் அதற்கு குறுக்கே நிற்கிறார் ஆளுநர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்கள் தடையாக உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள், பாஜகவில் இருந்து விலகி விட்டோம் என்று சொல்லி வேறு வழியில் ஆதாயம் தேட பார்பவர்கள் அதிமுக.

“பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்...” - எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி !

குடியுரிமை இல்லாமல் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருகிறது பாஜக. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதத்தால் பாதித்தால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 5 மதத்தினர் இந்தியாவுக்கு வரலாம் என்று சட்டம் கொண்டு வருகிறது. அப்போது இஸ்லாமியர்கள்? என்று நாங்கள் கேட்டோம்.

இந்தியாவில் பெரும் பாதகத்துக்கு துணை போன கட்சி அதிமுக, பாஜகவின் கேவலமான சட்டத்திற்கு துணை நின்ற கட்சி அதிமுக. இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். உரம், பூச்சிகொள்ளி விலை கூடுகிறது. அங்கே விவசாயி போராடுகிறான், போராடுகிறான்... ஆனால் முடிவே இல்லை. விவசாயக் கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் 10 ஆயிரம் கோடி கடன் வாங்கியதை தள்ளுபடி செய்தது பாஜக அரசு” என்றார்.

banner

Related Stories

Related Stories