தமிழ்நாடு

“சொல்வதெல்லாம் பொய்.. வெறும் வாயில் வடை சுடும் மோடி...” - 1000 வடைகளை பொதுமக்களுக்கு வழங்கிய திமுகவினர் !

“சொல்வதெல்லாம் பொய்.. வெறும் வாயில் வடை சுடும் மோடி...” - 1000 வடைகளை பொதுமக்களுக்கு வழங்கிய திமுகவினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி வீசியது. அதில் இம்மியளவு கூட தற்போது வரை பாஜக அரசு செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சியமைத்தில் இருந்தே மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இருப்பினும் பிரதமர் மோடி தாங்கள் மக்கள் நலனை செய்ததாக பொய்யுரைத்து வருகிறார்.

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஒன்றிய அரசு அதை செய்தது, இதை செய்தது என்று வாயாலே மோடி வடை சுட்டு வருகிறார். அண்மையில் நிகழ்ந்த புயல் வெள்ள சம்பவத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எட்டி கூட பார்க்காத நிலையில், மாநில அரசுக்கு நிதி தரவும் மறுத்தது. இந்த சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது, திமுக குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சித்திருந்தர்.

பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி வழக்கம்போல் வாயாலே வடை சுட்டார். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் மோடி, பொய்யாகவே கூறி வருகிறார். இந்த நிலையில் பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 'மோடி சுட்ட வடை' என்று மக்கள் மத்தியில் வடை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

“சொல்வதெல்லாம் பொய்.. வெறும் வாயில் வடை சுடும் மோடி...” - 1000 வடைகளை பொதுமக்களுக்கு வழங்கிய திமுகவினர் !

அந்த வகையில் தற்போது பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு, வெறும் வாயில் மோடி சுட்ட வடையை பிரதிபலிக்கும் வகையில் 1000 ஓட்டை வடைகளை நகர திமுக சார்பாக பொது மக்களுக்கு வழங்கினர். அதோடு மாஸ்டர் மோடி சுட்ட வடை - என்ற தலைப்பில் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் "மேரா பாயி அவுறு பெஹனோ" என்று வெறும் வாயில் மட்டும் வடை சுடுவதை கண்டிக்கும் வகையில் மோடி ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்து கூறினர்.

மேலும்,

1) நாட்டுப்பற்று என்று சொன்னார் - இராணுவத்தை விற்றார்.

2) வல்லரசு என்று சொன்னார் - ஏர் இந்தியா விற்றார்.

3) பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று சொன்னார் - GST என்ற பெயரில் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டார்.

4) தேசப்பற்று என்று சொன்னார் - நாட்டை பிளாட் போட்டு விற்றார்

5) மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொன்னார் - ஒற்றை செங்கலை மட்டுமே நாட்டினார்.

6) 15 லட்சம் மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவேன் என்று சொன்னார் - மக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மினிமம் பேலன்ஸ் என்று மக்களிடம் இருந்து பறித்தார்.

7) பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை விண்ணை மட்டும் வகையில் உயர்ந்துள்ளது..

8) தமிழ்நாட்டின் வெள்ளப் பேரிடருக்கு 10 பைசா கூட தராத ஒன்றிய பிரதமர் மோடி.

உள்ளிட்ட மோடி அரசின் பொய் வாக்குறுதியை மக்களுக்கு நினைவு படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories