தமிழ்நாடு

மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சி திமுக, அதனை யாராலும் அழிக்க முடியாது - அமைச்சர் ரகுபதி!

மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சி திமுக, அதனை யாராலும் அழிக்க முடியாது - அமைச்சர் ரகுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பிறந்த குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார். மேலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன், நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை பேசியதாவது, “எதிரிகளை பலவீனமாக எடை போட மாட்டோம். ஆனால் அதே நேரத்தில் எங்களுடைய சக்தி என்ன என்பது எங்களுக்கும் தெரியும், முதலமைச்சருக்கும் நன்றாக தெரியும். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திமுகவை எந்த ஒரு சக்தியாலும் அழித்துவிட முடியாது. அது இந்திய அரசியலில் யாருக்கும் கிடையாது. தமிழ்நாடு மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சிதான் திமுக.

மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சி திமுக, அதனை யாராலும் அழிக்க முடியாது - அமைச்சர் ரகுபதி!

சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கண்ணை மூடி சொல்லிக் கொண்டு இருக்கலாம். நடப்பதை தான் பார்க்க வேண்டும். முதலில் 3 சதவீத ஓட்டு வங்கியில் பாஜக தாண்டட்டும். அப்புறம் 30 சதவீதத்திற்கு போகலாம். ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும் உதயசூரியனை மறைக்க முடியாது.‌ தமிழ்நாட்டில் மறைக்க முடியாத சக்திதான் திமுக.

எங்கள் எம்.பி-க்கள் மக்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்களது எம்.பி-க்கள் காணாமல் போனதை தற்பொழுது மக்களுக்கு சுவரொட்டி நினைவுபடுத்தி வருகின்றனர். எங்கள் எம்.பி-க்களை எப்போதும் பார்க்கலாம். அவர்களது எம்.பி-க்கள்காணாமல் போனதால் தற்பொழுது சீட்டு கொடுப்பதற்காக காணவில்லை என்று சுவரோட்டி மூலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்கள் இதயங்களில் இருக்கக்கூடியவர் அவர். அவரது உழைப்பு என்பது திமுக தொண்டர்களாலும் தமிழ்நாடு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அண்ணாமலை போன்றவர்கள் அதை மூடி மறைக்க முயன்றாலும் உதாசீனப்படுத்தினாலும் மக்கள் இதயத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனி இடம் இருக்கிறது.

பாஜகவில் பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்களை‌ தெரிந்தே கட்சியில் சேர்க்கின்றனர். ஆனால் திமுக 2 கோடி உறுப்பினர்களை வைத்துள்ள மிகப்பெரிய இயக்கம். நாங்கள் ஒவ்வொருவரையும் பூதக்கண்ணாடி வைத்து அவர்களது குணாதிசயங்கள் என்ன என்பதை பார்க்க முடியாது. எங்களது கவனத்தில் தவறு செய்தார்கள் என்று வந்துவிட்டால் திமுக எந்த குற்றவாளியையும் சேர்க்காது, அனுமதிக்காது.

மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சி திமுக, அதனை யாராலும் அழிக்க முடியாது - அமைச்சர் ரகுபதி!

திமுக தலைமையிலான கூட்டணியில் இழுபறி என்று சொல்வதெல்லாம் வெளியே சொல்லும் புரளிகள் தான். கூட்டணியில் உள்ள பேச்சுவார்த்தை அனைத்தும் சுமுகமாக போய்க் கொண்டுள்ளது. அது நாடறிந்த விஷயம். திமுக கூட்டணியில் உள்ளவர்களிடம் பிரச்னையை ஏற்படுத்தி இந்த கூட்டணியில் உள்ளவர்களை அழைப்பவர்கள் அழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் தோழமைக் கட்சி தோழமையாக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர்களும் திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி உருவாக அடிப்படையாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறினார். அதனால்தான் திமுகவே இருக்காது என்று வேகப்பட்டு பேசக்கூடிய அளவிற்கு பிரதமர் மோடி தரம் தாழ்ந்து வந்திருக்கிறார். அவர் இங்கு வந்தது இந்தியா கூட்டணியின் வெற்றியை காட்டுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் தீவிர பணியாற்றி வெற்றியை பெற்று தருவார். எந்த ஒரு தொகுதிகளும் 2 லட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திற்கு குறைந்து இருக்காது. அந்த அளவிற்கு நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories