தமிழ்நாடு

“மோடி சொன்ன திட்டங்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் வழங்கிவிட்டார்” - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் !

இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெரும் என கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

“மோடி சொன்ன திட்டங்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் வழங்கிவிட்டார்” - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் திமுக அரசின் சாதனை விளக்கம் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் உயரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் அதன் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

“மோடி சொன்ன திட்டங்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் வழங்கிவிட்டார்” - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் !

மேலும்,எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், கட்டணமில்லா பேருந்து சேவை, மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, உங்களை தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு புதுமையான திட்டங்களை ஒவ்வொரு வீடுகளிலும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளது.

அப்போது கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “கடந்த சில தினங்களுக்கு முன் முன்பு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுகவை வேரோடு அழிப்பதாக கூறினார். கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன்பு இது போன்று கூறிய அனைவரும் அந்த தேர்தல்களில் படு தோல்வியை அடைந்தது. தற்போது இதை மோடி கூறி வருகிறார்.

“மோடி சொன்ன திட்டங்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் வழங்கிவிட்டார்” - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் !

இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாடு போல், இந்தியா முழுவதும் சிறப்பான ஆட்சி நடைபெறும். தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாள் பரிசாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று அவருக்கு கொடுக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

‘ஜல்ஜீவன்’ என்ற தண்ணீர் வழங்கும் திட்டத்தை கலைஞர் அவர்கள் 1970ஆம் ஆண்டிலே குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

இதேப் போல் குடிசையில் இருந்தவர்களை குடிபெயர்த்து குடிசை மாற்று வாரியம் அமைத்தவரும் கலைஞர்தான். மோடி இதைசெய்துவிட்டோம், அதை செய்துவிட்டோம் என சொல்லுகின்ற திட்டங்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் வழங்கிவிட்டார்." என்றார்.

banner

Related Stories

Related Stories