தமிழ்நாடு

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.2.2024) தூத்துக்குடியில் நடைபெற்ற, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. 

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல்,   மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். 

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !

அதிகனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பிற்குள்ளான பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் 21.12.2023 அன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்களை தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவது தான் திராவிட மாடல் அரசு. பாதிக்கப்படும்போது மட்டும் மக்களை பார்த்துவிட்டு செல்லாமல், இறுதி வரை மக்களின் துயரங்களை துடைப்பதன் அடையாளமாகத் தான், தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும்
அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் 

கூட்டுறவு துறை சார்பில், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், சிறப்பு சிறு வணிகக் கடன், கால்நடை கொள்முதல் கடன், என மொத்தம் 4446 பயனாளிகளுக்கு 24 கோடியே 54 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள், முழு சேதம் / காணாமல் போன மரப் படகு / பைபர் நாட்டுப் படகு, பகுதி சேதமடைந்த பைபர் நாட்டுப்படகு, வலைகள் மற்றும் இயந்திரம் சேதம், மீன் பண்ணைகள் சீரமைத்தல், உள்நாட்டு மீனவர்களின் காணாமல் போன வலைகள், என அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 5137 பயனாளிகளுக்கு 11 கோடியே 91 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகள்; 

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !

வேளாண்மைத் துறை சார்பில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 1,28,205 பயனாளிகளுக்கு 97 கோடியே 59 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறையில் 41,498 பயனாளிகளுக்கு 25 கோடியே 88 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள்;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள்

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 150 பயனாளிகளுக்கு 12 கோடியே 43 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கான கடனுதவிகள்;

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3845 பயனாளிகளுக்கு 132 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;

என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,83,301 பயனாளிகளுக்கு 305 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் 

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட தலா 4 இலட்சம் ரூபாய் வீதமும், பழுது நீக்க தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும், 779 பயனாளிகளுக்கு 17 கோடியே
98 இலட்சம் ரூபாய் நிதியுதவி;

கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வாங்கிட 4608 பயனாளிகளுக்கு 47 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் கடனுதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடனாக 2032 பயனாளிகளுக்கு 6 கோடியே 46 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கடனுதவி, கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 202 பயனாளிகளுக்கு கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கான ஆணைகள்;

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீர்செய்திட 8 பயனாளிகளுக்கு 1 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதியுதவி; 

வேளாண்மைத் துறை சார்பில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 12,300 பயனாளிகளுக்கு 8 கோடியே 93 இலட்சம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறையில் 1305 பயனாளிகளுக்கு 68 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள்;

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் 327 பயனாளிகளுக்கு 8 கோடியே 21 இலட்சம் ரூபாய் கடனுதவி;

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 210 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 16 கோடியே 15 இலட்சம் ரூபாய் கடனுதவி;

மீன்வளத்துறை சார்பில் மழை வெள்ளத்தால் படகுகள், எஞ்சின்கள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் 1053 மீனவர்களுக்கு 2 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மழை வெள்ளத்தால் கால்நடைகளை இழந்த 1051 விவசாயிகளுக்கு 6 கோடியே 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி;

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மழை வெள்ளத்தால் பாட புத்தகங்களை இழந்த 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 4803 மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்குதல்;

“2.21 லட்சம் பயனாளிகள்.. ரூ.423 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்” : மக்களின் துயர் துடைத்த முதலமைச்சர் !

வருவாய்த் துறை சார்பில் அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு 55 இலட்சம் ரூபாய் நிதியுதவி, 6647 கால்நடை உயிரிழப்பிற்கு 1 கோடியே 68 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, சேதமடைந்த வீடுகளின் 1553 பயனாளிகளுக்கு  1 கோடியே 49 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதியுதவி;  

போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1556 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டது, மழை வெள்ளத்தால் வாகனங்களை இழந்த 69 பயனாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது;  என மொத்தம் திருநெல்வேலி மாவட்டத்தில் 38,514 பயனாளிகளுக்கு 118 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்
பெருவெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளாக மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

banner

Related Stories

Related Stories