தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : இலவச சீருடை முதல்... பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு !

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : இலவச சீருடை முதல்... பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024-25) பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 'மக்களை தேடி மேயர்' உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள் அறிவித்தார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு :

* சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஷூ, இரண்டு செட் சாக்கஸ் வழங்கப்படும்

* ரூ.35 லட்சம் செலவில் வளர் இளம்பிள்ளைகளுக்கு ஆலோசனைகள் வழங்க 10 ஆலோசகர்கள் நியமனம்.

* உடற்கல்வியை மேம்படுத்த உடற்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்துதல், அவர்களை போட்டிகளுக்கு சென்று வரும் செலவு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

* தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மொழி பாடங்களில் எழுத்து திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : இலவச சீருடை முதல்... பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு !

* மழலையர் வகுப்பு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு உள்ளிட்ட பாடங்களை தெளிவாக மகிழ்ச்சியுடன் உற்ச்சாகத்துடன் கற்று கொள்ள ஏதுவாக உபகரணங்கள் வழங்கப்படும்.

* 10 ஆம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று 11 ஆம் வகுப்பினை சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடரும் மாணவர்களை 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரோ உள்ளிட்ட தேசிய அறிவியல் சார்ந்த மையங்கள் அழைத்து செல்ல ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.

* தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களை தலைவர்களாக கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்

* மாணவர் வருகையை 95 சதவீதம் மேல் உயர்த்திடும் பள்ளிகளுக்கு "excellence school" சான்றிதழ் வழங்கப்படும்

* மழலையர் வகுப்பை நிறைவு செய்யும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு "kindergaraden graduation" மழலையர் பட்டமளிப்பு வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories