தமிழ்நாடு

மருத்துவத்துறை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் மா.சு பேட்டி !

மருத்துவத்துறை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் மா.சு பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில அலுவலகத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை என்பது ஒரு கடினமான வாழ்க்கை. நானும் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை பெற்றோர்தான். என்னுடைய குழந்தை 30 ஆண்டு வளர்த்து இருக்கிறேன். நான் துணை மேயராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் என்னுடைய அலுவலகத்திற்கு மனு அளிக்க வருவார்கள்.

மருத்துவத்துறை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் மா.சு பேட்டி !

என்னுடைய அலுவலகம் இரண்டாம் தளத்தில் இருக்கும்; அங்கு வந்து மனு கொடுக்க மிகவும் அவதிக்குள்ளாவார்கள். எனவே அவர்கள் எளிதில் மனு அளிக்க வேண்டும் என தனி முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமினை மாற்றத்திறனாளிகள் எளிதில் பங்கேற்கும் வகையில் தரைத்தளத்தில் எல்லா ஏற்பாடுகள் செய்து நடத்தப்பட்டது. அவர்கள் அளிக்கும் மனுவிற்கு ஒரே இடத்தில் தீர்வு காணப்பட்டது.

கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.1000-த்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி கொடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 கொடுக்கப்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள பெண்ணிற்கு கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவத்துறை நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் மா.சு பேட்டி !

கடந்த காலத்தில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு இரண்டு கால்கள் இல்லை என்றால் தான் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கால் இழந்து இருப்பவர்களுக்கும் ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்ப தற்போது எல்லா நிகழ்ச்சியிலும் சைகை மொழிப்பெயர்ப்பாளர்கள் இடம்பெற்று வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாற்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அறையில் தனி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் வரும் 25-ம் தேதி முதியோர்களுக்கான தனி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள லிஃப்ட் இயக்க வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மருத்துவத்துறையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories