தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளிக் கல்வி துறைக்கு அறிவிக்கப்பட்ட 27 மகத்தான திட்டங்கள் - என்னென்ன?

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளிக் கல்வி துறைக்கு அறிவிக்கப்பட்ட 27 மகத்தான திட்டங்கள் - என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024-25) பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 'மக்களை தேடி மேயர்' உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புகள் பின்வருமாறு :

1. 2024-2025ஆம் கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் பயிலும் LKG வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும்.

2. பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 255 பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்.

3. 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் LKG வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணாக்கர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks வழங்கப்படும்.

4. பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை ரூ.3.00 கோடி செலவில் மேம்படுத்துதல்,

5. சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு (Imprest Amount) நிதி வழங்குதல்

6. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களில் திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் இணையதள வாயிலாகவும் SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE என்ற பயிற்சி பள்ளியில் சேர்த்து பயிற்சி வழங்குதல்

7. பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையிலுள்ள 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தமுள்ள 338 பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஐந்து வீதம் பச்சை வண்ணப்பலகைகள் வழங்குதல்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளிக் கல்வி துறைக்கு அறிவிக்கப்பட்ட 27 மகத்தான திட்டங்கள் - என்னென்ன?

8. சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தேசிய மாணவர் படை(NCC) மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தில் கலந்துக்கொண்டு (Scout & Guides ) பங்காற்றி வரும் மாணாக்கர்களுக்கு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்குதல்.

9. அனைத்து சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கும், அடையாளஅட்டை (ID Card) வழங்குதல்.

10. பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாயக் கல்லூரிகளில் ரூ.50.00 இலட்சம் செலவில் முன்னேற்றத்திற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

11. சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையில் சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.

12. சென்னை மழலையர் பள்ளிகளில் (LKG & UKG) பயிலும் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் புத்தகங்கள் அச்சிடுதல்.

13. சென்னை பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்துதல்.

14. உடற்கல்வி மேம்படுத்துவதற்காக விளையாட்டு கருவிகள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களை சிறப்பு பயிற்சி அளித்து மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளில் பங்குபெறச் செய்தல்.

15. சென்னை பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் பள்ளிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை காட்சிப்படுத்தி பாராட்டு விழாக்கள் நடத்தப்படும்.

16. பெருநகர சென்னை செயல்பட்டு வரும் 92 மாநகராட்சி, கல்வித்துறையின் கீழ் நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு INTERACTIVE GAMES & புத்தகங்கள் பயன்படுத்தப்படும்.

17. சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயின்று வரும் 75,793 மாணாக்கர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்தின் வாசிப்பு திறன் மற்றும் எழுத்துத்திறனை மேம்படுத்தவும் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை வளர்க்க ஏதுவாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.

18. சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், முதற்கட்டமாக 140 பள்ளிகளில் பயிலும் மழலையர் மாணாக்கர்களுக்கு (LKG, UKG) தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களை எளிதாகவும், மகிழ்வுடனும் கற்க ஏதுவாக கற்றல் உபகரணங்கள் வழங்குதல்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளிக் கல்வி துறைக்கு அறிவிக்கப்பட்ட 27 மகத்தான திட்டங்கள் - என்னென்ன?

19. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இசைக்குழுவினை அமைக்க ஏதுவாக இசைக்கருவிகள் வழங்குதல்.

20. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணாக்கர்கள் (2023-24)ஆம் கல்வியாண்டின் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னை பள்ளிகளிலேயே தொடர்ந்து 11-ஆம் வகுப்பு சேர்ந்து பயிலும் 50 மாணாக்கர்களை Indian Space Research Organisation (ISRO) சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.

21. பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட 8 உயர்நிலை மற்றும் 3 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 11 பள்ளிகளுக்கு நகல் எடுக்கும் வசதியுடன் கூடிய பிரிண்டர்கள் வழங்குதல்.

22. சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களைத் தலைவராகக் கொண்டு “குழந்தைகள் பாதுகாப்பு குழு" அமைத்தல்.

23. சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணாக்கர்களின், சமூக நலனில் அவர்தம் பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக அகற்றும் விழிப்புணர்வை வாரந்தோறும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருதல்.

24. 2024-2025 ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களிடையே வாசிப்புப் பழக்கத்தைச் சிறந்த முறையில் வழிநடத்தும் நோக்கோடு இயங்கி வரும் நூலகத்தை கொண்டுள்ள பள்ளிகளுக்கு நல்நூலகப்பள்ளி என்ற விருது பாராட்டுச்சான்றிதழாக வழங்கப்படும்.

25. பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னைப் பள்ளிகளில் பாலின குழுக்கள் செயல்பாடுகள் அறிமுகப்படுத்துதல் (Gender Club) 2024-2025.

26. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சென்னைப் பள்ளிகளில் மாணவர்கள் வருகையை 95% மேல் உயர்த்திட உழைக்கும் பள்ளிகளுக்கு Excellent school என்ற பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.

27. சென்னைப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இரண்டாம் ஆண்டு (UKG) பயின்று வரும் 5944 மாணவ மாணவியர்களுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories