அரசியல்

சண்டிகர் தேர்தல் : “பாஜக-வின் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை...” - முதலமைச்சர் கருத்து!

பா.ஜ.க-வின் தொடரும் சூழ்ச்சி மற்றும் தந்திரமான நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த இறுதி எச்சரிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சண்டிகர் தேர்தல் : “பாஜக-வின் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை...” - முதலமைச்சர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமார் என்பவரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் என்பவரும் போட்டியிட்டனர். அப்போது நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என தெரியவந்தது. இதனால் தோல்வி பயத்தில் ஒன்றிய பாஜக அரசு மேயர் தேர்தலை 2 முறை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது.

சண்டிகர் தேர்தல் : “பாஜக-வின் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை...” - முதலமைச்சர் கருத்து!

மொத்தம் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அனில் மசி அறிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனில் மசியை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது. மேலும் அவர் வேண்டுமென்றே பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என்றும் குறிப்பிட்டது.

தொடர்ந்து தேர்தல் அதிகாரி அனில் மசியை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் பாஜக வெற்றி செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தை இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சண்டிகர் தேர்தல் : “பாஜக-வின் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை...” - முதலமைச்சர் கருத்து!

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது சமூக வலைதள பக்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சண்டிகர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் மீதான கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நாடறிந்து நடந்த தேர்தல் முறைகேட்டை விசாரித்து தேர்தலை ரத்து செய்தது மட்டுமின்றி தேர்தல் அதிகாரியின் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

பா.ஜ.க-வின் தொடரும் சூழ்ச்சி மற்றும் தந்திரமான நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த இறுதி எச்சரிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories