தமிழ்நாடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி : வட சென்னைக்கு கவனம் செலுத்தும் நிதிநிலை அறிக்கை!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி : வட சென்னைக்கு கவனம் செலுத்தும் நிதிநிலை அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து பிப். 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இன்று 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியன் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராக அகலப்படுத்தப்படும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் அகலப்படுத்தப்படும். இதற்காக ரூ.300 கோடி நிதி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் ரூ.100 கோடியில் புதிய வசதிகளுடன் அழகுபடுத்தப்படும்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் ரூ.75 கோடியில் புதிய குடியிருப்புகள், எழும்புர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.53 கோடி, இரயபுரத்தில் உள்ள RSRM மருத்துவமனையில் ரூ.69 கோடியில் 2 புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.

அதேபோல் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.55 கோடியில் 3 புதிய தளங்கள், ரூ.11 கோடியில் தொழிற்பயிற்சி நிலையம், ரூ30 கோடியில் ரெட்டேரி, வில்லிவாக்கம் பாடி எரிகளை சீரமைத்தல்,

ரூ.45 கோடியில் பள்ளிகளைப் புதுப்பித்தல் என வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ,1000 கோடி நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நீர்நிலை மாசுபாட்டை தவிர்ப்பதற்கு ரூ.946 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.

சென்னை பூந்தமல்லி அருகே அதிநவீனத் திரைப்பட நகரம் 150 எக்கர் பரப்பளவில் ரூ.500 கோடியில் உருவாக்கப்படும்.

சென்னை நிதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு நிதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் ரூ.1500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

banner

Related Stories

Related Stories