தமிழ்நாடு

இனி இவர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் : தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அசத்தலான அறிவிப்புகள் என்ன?

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இனி இவர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் : தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அசத்தலான அறிவிப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து பிப். 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இன்று 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.

1000 புதிய மகளிர் சுய உதவிக்கு குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புக்கு ரூ.35000 கோடி ஒநிதி ஒதுக்கீடு செய்யப்படும். பணிபுரியும் மகளிருக்கான புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 100 கலை மற்றும் அறிவியல் , பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 1000 இளைஞர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வானையம் (ssc), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆறு மாத உறைவிடப் பயிற்சியுடன் வழங்கப்படும். இதற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாளை போன்ற பகுதிகளுக்கும் விடியல் பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories