தமிழ்நாடு

ஆபத்தான முறையில் யானையை விரட்டி வீடியோ வெளியிட்ட அதிமுக நிர்வாகி : ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

யானையை ஆபத்தான முறையில் விரட்டிய அ.தி.மு.க நிர்வாகிக்கு வனத்துறை ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆபத்தான முறையில் யானையை விரட்டி வீடியோ வெளியிட்ட அதிமுக நிர்வாகி : ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் நவமலை பகுதியில் கோட்டூர சார்ந்தை அ.தி.மு.க நிர்வாகி மிதுன் காரில் சென்றுள்ளார். அப்போது சாலையில் யானை ஒன்று சென்றுள்ளது. இதை மிதுன் காரின் உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) இயக்கி யானையை விரட்டியுள்ளார். மேலும் யானையை விரட்டுவதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் மிதுனுக்கு கடும் எதிர்ப்புகளை எழுப்பினர். பின்னர் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அதிமுக நிர்வாகி மிதுனுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் உள்ள வன பகுதிகளுக்குள் பயணிப்பதே குற்றம். பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலிலுள்ள வன விலங்குகளை துன்புறுத்துவது, யானை போன்ற விலங்கு இனங்களிடம் ஆபத்தான முறையில் நடந்து கொள்வது சட்டப்படி பெரும் குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories