தமிழ்நாடு

“பொய்களின் மேல் பொய்கள்” : அண்ணாமலையின் இந்த வார காமெடிகள்!

“இன்னுயிர் காப்போம்” என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை, “Good Samaritan” திட்டத்தோடு ஒப்பிடும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!

“பொய்களின் மேல் பொய்கள்” :  அண்ணாமலையின் இந்த வார காமெடிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் திட்டங்களை எல்லாம் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அதிலும் ஆகச்சிறந்த திட்டங்களில் ஒன்றான “இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் கனிசமாக குறைந்துள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டு அரசுக்கு கிடைக்கும் இந்த புகழைப் பொருத்துக்கொள்ள முடியாமல் மனம் போன போக்கில் எதோ திரியும் என்ற பழமொழிக்கேற்ப , ’இன்னுயிர் காப்போம் திட்டம் ஒன்றிய அரசு திட்டத்தின் நகல் என, தனது சமூக வலைதள பக்கத்தில் மனம் போன போக்கில் உளறி கொட்டியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.

“Good Samaritan என்ற ஒன்றிய அரசு திட்டம் தான் சாலை விபத்திற்கு உள்ளாகுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவற்றை பின்பற்றி தான் தற்போது தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை போல் சொல்லியிருக்கும் அண்ணாமலையின் இந்த வடிகட்டிய பொய்யை சமூக வலைதளத்தில் மக்கள் கிண்டலடித்து வருகிறார்கள். ஆனால் அப்போதும் அதை கடந்து போகாமல் தன்னிடம் சான்றுகள் இருக்கிறது அதை வைத்து நிருபிப்பேன் என்று எல்லாம் கூறி மக்களின் முழு கேளிக்கு அண்ணாமலை ஆளாகி இருக்கிறார்.

“பொய்களின் மேல் பொய்கள்” :  அண்ணாமலையின் இந்த வார காமெடிகள்!

அண்ணாமலை குறிப்பிட்டு கூறிய “Good Samaritan என்ற ஒன்றிய அரசு திட்டம், 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, இன்றளவும் முன்மொழிந்த அளவிலே உள்ளது. இன்று வரை செயல்முறைக்கு கூட வரவில்லை. அதுவும் 2020இல் முன்மொழிந்த போது இருந்த நிலையிலே இருக்கிறது. அப்போது அறிவித்த உதவிதொகையை தற்போதும் குறைத்தும் அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவ ஏறத்தாழ 4 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த முண்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் தான் இந்த் திட்டத்திறகு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத “இன்னுயிர் காப்போம்” திட்டத்தை ஒப்பிட்டு போலி நகையாடியிருக்கிறார் அண்ணாமலை. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் வரையறையில், சாலை பாதுகாப்பிற்கான சிறப்பு குழு, சாலை பாதுகாப்பு ஆணையம், சீரான சாலைகள், நம்மை காக்கும் - 48, இன்னுயிர் காப்போம் - உதவி செய் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இதன் வழி, பல்வேறு உதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆனால், அண்ணாமலை கூறும் திட்டம் செயல்முறைக்கு வராத நிலையில், அதன் வரையறையும் வேறாகவே உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு செயல்படுத்திய திட்டம் தான், “இன்னுயிர் காப்போம்” என்ற அண்ணாமலையின் பதிவு நகைப்பிற்குள்ளாகியுள்ளது.

ஆளுநர்- சபாநாயகர்; திரிணாமூல் காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இந்த வாரத்தின் காமெடியில் இதுவும் அடங்கும்.!

banner

Related Stories

Related Stories