தமிழ்நாடு

”வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்” : பேரவையில் EPSக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் எ.வ.வேலு!

விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணம் அரசுக்கு ஒரு போதும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் தெரிவித்துள்ளார்.

”வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்” : பேரவையில் EPSக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 12 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் சிப்காட் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அ.தி.மு.க அரசு தான் தொடங்கியது. இந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் காரணமாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

இந்த திட்டத்திற்கு எதிராகச் சிலர் தூண்டுதலின் அடிப்படையில்தான் சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இல்லை. தற்போது போராட்டமும் குறைந்துவிட்டது.

அதேபோல், நிலங்களைக் கையகப்படுத்துவது அரசு எடுத்துக் கொள்வதற்காக அல்ல. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கவே அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணம் ஒருபோதும் அரசிற்கு இல்லை." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories