தமிழ்நாடு

”விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல” : கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதலுக்கு கனிமொழி MP கண்டனம்!

விவசாயிகள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல” : கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதலுக்கு கனிமொழி MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதற்காக, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாகன டயர்களை பழுதுப்படுத்தும் வகையில் தரையில் ராட்சத ஆணிகள் அடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளின் வாகனங்களை எதிர்த்துச் சென்று டயர்களை குத்திக் கிழித்து விட்டு திரும்பும் எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜக அரசு மேற்கொண்டு இருந்தாலும் தடுப்புகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் முன்னேறி வருகிறார்கள். இதையடுத்த முன்னேறி வரும் விவசாயிகள் மீது நேற்று இரவு முழுவதும் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

”விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல” : கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதலுக்கு கனிமொழி MP கண்டனம்!

இன்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சிங்கு எல்லைக்கு விவசாயிகள் வராமல் தடுக்க கிராமப்புற சாலைகளில் பள்ளங்கள் தோண்டி சேதப்படுத்தி வருகிறது ஹரியானா பா.ஜ.க அரசு.

இதையடுத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தச்செல்லும் விவசாயிகள் மீது பா.ஜ.க அரசு கொடூரத் தாக்குதலுக்கு விவசாயிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "2021ல் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் மீது காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனங்கள். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories