தமிழ்நாடு

”மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைப்போம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

”மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைப்போம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணியாகச் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என தி.மு.க சார்பில் அண்மையில் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திருவல்லிக் கேணி - வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை' அருகில் தொடங்கிய இந்த அமைதிப்பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.

அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த அமைதிப் பேரணியில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்.

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்!" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories