அரசியல்

பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!

“‘வாக்குத் திருட்டு’க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் ‘தொடை நடுங்கி’ வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்!!”

பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் த.வெ.க கட்சி, தேசிய அளவில் இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்காதது சர்ச்சையாகி வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) முறையையும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சை செயலையும் கண்டித்து நாடே கொந்தளிக்கும் வேளையில், த.வெ.க மட்டும் வெற்று அறிக்கைகளோடு தனது கண்டனத்தை நிறுத்திக் கொள்கிறது.

மூச்சுக்கு முந்நூறு முறை தி.மு.க.வை குறைசொல்லும் த.வெ.க, எஸ்.ஐ.ஆர் முறைகேட்டிலும் தி.மு.க.வை மட்டுமே சீண்டி வருகிறது.

பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!

ஒட்டுமொத்த தேசியமே, டெல்லியில் மோடி - அமித்ஷாவை நோக்கி கேள்வி எழுப்பினால், அந்த பக்கமே த.வெ.க.வினர் திரும்பிப்பார்ப்பதில்லை.

இதனைக் கண்டித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“‘வாக்குத் திருட்டு’க்கு எதிராகத் தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் ‘தொடை நடுங்கி’ வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்!! இருந்துவிட்டுப் போகட்டும்.

காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு ‘காப்பிரைட்’ கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம் - காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்!!”

banner

Related Stories

Related Stories