தமிழ்நாடு

“நவம்பர் 15-க்கு மேல்... தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்!” : வி.என்.துரை எச்சரிக்கை!

“முரசு புயலால் மிகப்பெரிய அளவிலான அலைகள் சென்னையில் உருவாக வாய்ப்பில்லை” என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.என்.துரை தகவல்!

“நவம்பர் 15-க்கு மேல்... தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்!” : வி.என்.துரை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னையில் ‘முரசு’ புயலின் தாக்கம் பெரிதாக இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.என்.துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,

“சென்னைக்கு வடகிழக்கில் 150 கி.மீ தொலைவில் ‘முரசு’ புயல் நிலைக்கொண்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரில் நாளை (நவ.3) காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

“நவம்பர் 15-க்கு மேல்... தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்!” : வி.என்.துரை எச்சரிக்கை!

இப்புயலால் மிகப்பெரிய அளவிலான அலைகள் சென்னையில் உருவாக வாய்ப்பில்லை. ஆனால், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழைக்கான வாய்ப்புள்ளது.

‘முரசு’ புயல் ஆந்திரப் பகுதியில் நாளை அதிகாலை கரையைக் கடக்க இருக்கும் நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல்கள் தமிழ்நாட்டை நோக்கி வரும். நவம்பர் 15-ஆம் நாளுக்கு மேல் புயலுக்கு வாய்ப்புள்ளது.

சூறைக்காற்று வீசி வருவதால், இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.”

banner

Related Stories

Related Stories