தமிழ்நாடு

”நாடாளுமன்ற தேர்தலில் நமது முதலமைச்சரின் வெற்றி நாதம் ஒலிக்கும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு அனல் பேச்சு!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

”நாடாளுமன்ற தேர்தலில் நமது முதலமைச்சரின் வெற்றி நாதம் ஒலிக்கும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு அனல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடல் முன்பு மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. பின்னர் மாநாட்டுத் திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.

இதையடுத்து இம்மாநாட்டில் நீட் தேர்வு ரத்து முதல் மாநில சுயாட்சி வரை ஒன்றிய அரசைக் கண்டித்து 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு தலைப்புகளில் அமைச்சர்கள் மற்றும் சிறப்பு தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், "நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு" என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர், "மூன்று எழுத்தில் நமது மூச்சை அடைக்கிற சொல் என்றால் அது GST. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு வரிப்பகிர்வாக 6.5 லட்சம் கோடி ரூபாய் வழங்குகிறது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்குத் திருப்பித் தருவதோ வெறும் ரூ.2.5 லட்சம் கோடிதான்.

ஆனால், ரூ.2.70 லட்சம் கோடி வரிப்பகிர்வு தரும் உத்தரப் பிரதேசத்துக்கு ஒன்றிய அரசு ரூ.11 லட்சம் கோடி வழங்குகிறது. நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

நாடாளுமன்றத் தேர்தல் பாரத போர்க்களமாக அமையும். இந்த போர்க்களத்தில் நமது முதலமைச்சர் எழுப்பக்கூடிய அந்த வெற்றி நாதம் சங்க நாதமாக ஒலிக்கும். உதயநிதி கையில் இருக்கக்கூடிய காண்டீபமாக அது வீறுகொண்டு எழும்" என தெரிவித்தார்.

”நாடாளுமன்ற தேர்தலில் நமது முதலமைச்சரின் வெற்றி நாதம் ஒலிக்கும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு அனல் பேச்சு!

அதேபோல், "கழக ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பும்" என்ற தலைப்பில் எம்.எம்.அப்துல்லா MP பேசும் போது, "வட இந்தியாவே நடுங்கும் அளவிற்கு இளைஞரணி மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு நான் முதல்வன் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார் நமது முதலமைச்சர். முதலமைச்சரின் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் அடுத்த ஒற்றை நம்பிக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். எத்தனை தலைவர்கள் வந்தாலும் அவர்கள் மதம் சாதி சார்ந்த தலைவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே இருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories