தமிழ்நாடு

”பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

”பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக மிக பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் இம்மாநாட்டிற்கான தீப ஒளி சுடர் பயணத்தைச் சென்னையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த தீப ஒளி சுடர் பயணம் இன்று சேலம் வந்தடைந்தது. இந்த தீப ஒளி சுடரை சேலம் மாவட்டம் எல்லைப் பகுதியான தலைவாசலில் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மற்றும் அமைச்சர்கள் உரையாற்றுகிறார்கள். மேலும் கலைஞர் நூற்றாண்டினை கொண்டாடும் வகையில் கனிமொழி எம்.பி பிரம்மாண்டாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தி.மு.க கொடியினை ஏற்றிவைக்கிறார்.

அதேபோல் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டிற்குத் தலைமையேற்று உரையாற்ற நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் இம்மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், "சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர். லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம்கழக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories