தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி & பத்திரிகையாளர் பற்றி அண்ணாமலையின் ஆபாச பேச்சு... வலுக்கும் கண்டனங்கள் !

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி & பத்திரிகையாளர் பற்றி அண்ணாமலையின் ஆபாச பேச்சு... வலுக்கும் கண்டனங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக தலைவராக அண்ணமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்றால், அவர்களிடம் அவதூறாகவும், அவமரியாதையாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அண்ணாமலை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களை இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் உட்பட எதிர்க்கட்சியினர் என அனைவரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இருப்பினும் தனது திமிர் பேச்சின் தொனியில் இருந்து மாறாமல், தொடர்ந்து அண்ணாமலை பத்திரிகையாளர்களை அவமதித்து வருகிறார்."

அமைச்சர் உதயநிதி & பத்திரிகையாளர் பற்றி அண்ணாமலையின் ஆபாச பேச்சு... வலுக்கும் கண்டனங்கள் !

காரணம் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு அண்ணாமலைக்கு பதில் தெரியாவிட்டால் அப்படியே பேச்சை மாற்றி திசை திருப்பி விடுகிறார். இப்படியே பலமுறை செய்த அண்ணாமலை, தற்போதும் செய்துள்ளார். பத்திரிகையாளர் மற்றும் அமைச்சர் உதயநிதியை ஆபாச வார்த்தைகளால் பேசி அண்ணாமலை மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது நேற்று பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த நிலையில், அண்ணாமலை பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் உதயநிதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முறையாக பதிலளிக்காமல் ஆபாச வார்தைகளால் கொச்சை மொழியில் பேசியுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பேசிய அண்ணாமலை, தான் கொங்குநாடு மொழியில் பேசியதாகவும், அதில் ஆபாசமில்லை என்றும் மட்டமான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கும் அண்ணாமலை, தன்னால் இதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி & பத்திரிகையாளர் பற்றி அண்ணாமலையின் ஆபாச பேச்சு... வலுக்கும் கண்டனங்கள் !

இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி எம்.பியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளார் பதிவில், "ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories