தமிழ்நாடு

நாளை மறுநாள் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு - என்ன காரணம்?

டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு சந்திக்கிறது.

நாளை மறுநாள் :  ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ. 37,907.19 கோடி கோரியுள்ளது.

நாளை மறுநாள் :  ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு - என்ன காரணம்?

மேலும் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். மேலும் ன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்து, மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல் தென்மாவட்டங்களில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இப்படி அடுத்தடுத்து ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்துவிட்டு சென்ற பிறகு கூட தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணை நிதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாட்டு அனைத்துக்கட்சி குழுவினர் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்கிட வலியுறுத்த இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories