தமிழ்நாடு

அண்ணாமலையிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர் : தடுத்து நிறுத்தி பா.ஜ.கவினர் அராஜகம்!

கும்பகோணத்தில் அண்ணாமலையிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர்களை பா.ஜ.கவினர் தடுத்து நிறுத்தி அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.

அண்ணாமலையிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர் : தடுத்து நிறுத்தி பா.ஜ.கவினர் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நேற்று நடைபெற்றது. இதற்காக அரசின் விதிகளை மீறி பா.ஜ.கவினர் பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் பெரிய பெரிய பேனர்களை வைத்திருந்தனர்.

மேலும் சாலைகளை மறைத்தும் பேனர் மற்றும் கொடிக் கம்பங்களை வைத்துள்ளனர். இதனால் வாகனத்தில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இது குறித்து ஆதங்கப்பட்ட பொதுமக்களையும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.

அண்ணாமலையிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர் : தடுத்து நிறுத்தி பா.ஜ.கவினர் அராஜகம்!

அதோடு அண்ணாமலையின் நடைப்பயண நிகழ்ச்சியை செய்தியாக்குவதற்காக வந்த செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பா.ஜ.கவினர், பத்திரிகையாளர்களைத் தள்ளிவிட்டு அவர்களது பணியைச் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் அவர்களை ஒருமையில் திட்டி அராஜகமாக நடந்து கொண்டனர்.

அப்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கட்சி தொண்டர்களைத் தடுக்காமல் அப்படியே அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாகவே அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் பத்திரிக்கையாளர்களை அவமரியாதையுடன் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories