தமிழ்நாடு

”சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு” : அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு” :  அமைச்சர் தா.மோ. அன்பரசன்  பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா புனித தோமையர்மலை தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் செ.ஆல்பர்ட் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம் வரவேற்றார்.

இந்த விழாவில் நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன்,கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

”சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு” :  அமைச்சர் தா.மோ. அன்பரசன்  பெருமிதம்!

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், " சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான். இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் நமது கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்தான்.சிறுபான்மை மக்களுக்காக முதலமைச்சரும், தி.மு.கவும் எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கொடூரமான மசோதாக்களை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு ஆபத்து ஏற்படுத்தப் போகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக எதிர்க்கட்சிகளின் இடைநீக்கம் உள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories