தமிழ்நாடு

பாலம் கட்டும் பணியை தடுத்து கொலை மிரட்டல் : பா.ஜ.க ஒன்றிய தலைவர் அதிரடி கைது!

திண்டுக்கல்லில் பாலம் கட்டும் பணியை தடுத்து ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க ஒன்றிய தலைவரை போலிஸார் கைது செய்தனர்.

பாலம் கட்டும் பணியை தடுத்து கொலை மிரட்டல் : பா.ஜ.க ஒன்றிய தலைவர் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி ஆற்றைக் கடந்து செல்ல பாம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.44 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறி வருவதைக் கண்கூடாகப் பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் புதிய பாலம் வருகைக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆத்தூர் ஒன்றிய பா.ஜ.க தலைவர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அய்யனவேல் என்பவர், மக்கள் கோரிக்கைக்குத் தடையாகப் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

அதோடு, பாலம் கட்டும் ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து ஒப்பந்ததாரர் திருப்பதி, பா.ஜ.க ஒன்றிய தலைவர் அய்யனவேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அய்யனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories