அரசியல்

பிரஞ்சு TO செம்மஞ்சேரி.. அடுக்கடுக்கான சமாளிப்பு.. “நா ஏன் மன்னிப்பு கேட்கனும்?” - பாஜக நிர்வாகி குஷ்பு !

‘சேரி’ விவகாரத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்துள்ளது தற்போது அனைவர் மத்தியிலும் மேலும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

பிரஞ்சு TO செம்மஞ்சேரி.. அடுக்கடுக்கான சமாளிப்பு.. “நா ஏன் மன்னிப்பு கேட்கனும்?” - பாஜக நிர்வாகி குஷ்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின்போது நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல நடிகர்கள், நடிகைகள் மன்சூர் அலிகான் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோடு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அந்த வகையில், நடிகையும் பா.ஜ.க தலைமையின் ஆதரவால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, தனது சமூகவலைதளத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது கருத்து தெரிவிக்காமல் தற்போது நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பிரஞ்சு TO செம்மஞ்சேரி.. அடுக்கடுக்கான சமாளிப்பு.. “நா ஏன் மன்னிப்பு கேட்கனும்?” - பாஜக நிர்வாகி குஷ்பு !

இதனால் மிகுந்த ஆவேசமடைந்த குஷ்பூ, மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில், "உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என காட்டமாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்புவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் 'சேரி' என்றால் பிரஞ்சு மொழியில் 'அன்பு' என்று புதிய விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். எனினும் அவரது உருட்டுக்கு மயங்காத மக்கள், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரஞ்சு TO செம்மஞ்சேரி.. அடுக்கடுக்கான சமாளிப்பு.. “நா ஏன் மன்னிப்பு கேட்கனும்?” - பாஜக நிர்வாகி குஷ்பு !

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, செம்மஞ்சேரி, வேளச்சேரி என்பது போல் 'சேரி' என்று கூறியுள்ளதாகவும், தான் யார் மனதையும் புண்படுத்தவில்லை; எனவே தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பதிவை நீக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே விசிக தரப்பில் குஷ்பூ மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குஷ்பூவின் இந்த புதிய விளக்கத்துக்கு காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய குஷ்பூவின் வீட்டை முற்றுகையிட்டு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பிரஞ்சு TO செம்மஞ்சேரி.. அடுக்கடுக்கான சமாளிப்பு.. “நா ஏன் மன்னிப்பு கேட்கனும்?” - பாஜக நிர்வாகி குஷ்பு !

ஒரு பக்கம் பாலியல், வன்முறை, வன்கொடுமை, திருட்டு, கொள்ளை, கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் பாஜகவினர் சிக்கி வரும் நிலையில், தற்போது பட்டியலின பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசி, பாஜக நிர்வாகி குஷ்பூ புது சர்ச்சையால் சிக்கியுள்ளார். அதோடு தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்காமல், மன்னிப்பு கேட்க முடியாது என்று அவர் பேசியுள்ளது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திரிஷாவை பற்றி பேசிய மன்சூர் அலிகானே மன்னிப்பு கேட்டு இந்த பிரச்னையை முடித்து வைத்து விட்ட நிலையில், குஷ்பூ பேசிய கருத்து மக்கள் மனதை புண்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories