தமிழ்நாடு

அரியவகை நோயால் கறுத்துப்போன கால்கள் : 10 மாதம் சிகிச்சை - சிறுமியை மீண்டும் நடக்கவைத்த தி.மு.க அரசு!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட சிறுமிக்கு ஆறுவை சிகிச்சை மூலம் தமிழ்நாடு அரசு நம்பிக்கையூட்டியுள்ளது.

அரியவகை நோயால் கறுத்துப்போன கால்கள் : 10 மாதம் சிகிச்சை - சிறுமியை மீண்டும் நடக்கவைத்த தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சிறுமி அபிநயா. 13 வயதாகும் இவர் எஸ்.எல்.இ எனப்படும் இரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இரு கால்களிலும் இரத்த ஓட்டம் தடைபட்டு மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கறுத்துள்ளது.

இதற்காக சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். ஆனால் அதனை சரி முடியவில்லை. பிறகு சிறுமியின் நிலைகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிறுமி அபிநயா சென்னை இராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில்கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அச்சிறுமிக்கு இரத்த நாள் அறுவை சிகிச்சைத்துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்குவாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவ துறை போன்ற பல்வேறு உயர்சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

அரியவகை நோயால் கறுத்துப்போன கால்கள் : 10 மாதம் சிகிச்சை - சிறுமியை மீண்டும் நடக்கவைத்த தி.மு.க அரசு!

இரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரிசெய்து, இருகால்காளின் முன்பாதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக சிறு உள்ளார்.

மேலும் காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டியிலிருந்து இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2,86,000 செலவில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினால் அக்குழந்தையால் எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்கிறார்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றித் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவத்துறையில் இப்படி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் எடுத்து அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிடந்த ஆண்டு கூட முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு தரமான சிகிச்சைகள் மூலம் அவரது முகம் இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories