தமிழ்நாடு

கன மழை - மண் சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை: 4 மணி நேரத்தில் பம்பரம் போல் சுழன்று சரி செய்த அரசு நிர்வாகம்!

நீலகிரியில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை 4 மணி நேரத்தில் சரி செய்து மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

கன மழை - மண் சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை: 4 மணி நேரத்தில் பம்பரம் போல் சுழன்று சரி செய்த அரசு நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்து கனமழையால் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரி ஏற்பட்டது.

மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களிலும், கோத்தகிரி -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களிலும் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் உதகைக்கு வரும் பிரதான இரண்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டது.

இதனைத் தீயணைப்புத் துறையினர் , நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் அரசு நிர்வாகத்தால் 4 மணி நேரத்திற்குள் மண் சரிவு ஏற்பட்ட சாலைகளை கடும் போராட்டத்திற்குப் பிறகுச் சரி செய்தனர். மேலும் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வேகமாக சரியும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கன மழை - மண் சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை: 4 மணி நேரத்தில் பம்பரம் போல் சுழன்று சரி செய்த அரசு நிர்வாகம்!

மேலும் குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட அப்பர் குன்னூர், ஓட்டுபட்டறை, போன்ற பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, "கன மழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மண் சரிவால் பாதிக்கப்பட்டது. இதை 4 மணி நேரத்தில் துரித நடவடிக்கைகள் எடுத்துச் சரி செய்யப்பட்டு தற்போது போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்கு நடக்கும் நிலவரங்களை முதலமைச்சர் தொலைப்பேசியில் கேட்டு ஆலோசனை வழங்கி வருகிறார்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories