தமிழ்நாடு

“திமுக தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை மோடியால் ஏவப்படும் EDக்கு அஞ்ச மாட்டோம்” : ஆ.ராசா எம்.பி ஆவேசம்!

திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20% போனஸ், 435 ரூபாய் சம்பள உயர்வு அறிவித்த பெருமை திமுகவுக்கு மட்டுமே சேரும் என ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ள்ளார்.

“திமுக தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை மோடியால் ஏவப்படும் EDக்கு அஞ்ச மாட்டோம்” : ஆ.ராசா எம்.பி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்.(TANTEA) மிகவும் லாபகரமாக இயங்கி வந்த இந்த நிர்வாகம் பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எவ்வித நிதி முதுக்காததால் TANTEA நஷ்டத்தை நோக்கி சென்றது.

இதனால் அதிமுக ஆட்சியில் 10% போனஸ் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் , இவர்களுக்கு தின சம்பளத்தையும் உயர்த்தவில்லை இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பில் TANTEA புனரமைக்கப்பட்டது.

அத்துடன் 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் 20% போனஸ் மற்றும் தினச் சம்பளம் 365 ரூபாயிலிருந்து 435 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

“திமுக தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை மோடியால் ஏவப்படும் EDக்கு அஞ்ச மாட்டோம்” : ஆ.ராசா எம்.பி ஆவேசம்!

இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உட்பட அமைச்சர்களுக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பை அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா :- நீலகிரி மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு கொட்டி தீர்த்த கனமழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டபோது அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் இடம் கூறிய போது 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தை மீட்டெடுக்க 150 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினார் அதே வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் TANTEA தோட்ட தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து 24 மணி நேரத்தில் 20% போனஸ், 435 ரூபாய் சம்பள உயர்வு அறிவித்த பெருமை திமுகவுக்கு மட்டுமே சேரும் என்றார்.

“திமுக தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை மோடியால் ஏவப்படும் EDக்கு அஞ்ச மாட்டோம்” : ஆ.ராசா எம்.பி ஆவேசம்!

தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற மகத்தான கடமை இருப்பதால் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவரின் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

திமுகவின் தலைவர் முதல் கடைசி தொண்டன் வரை மோடியால் ஏவப்படும் இடி வருமானத்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 65 கோடி ரூபாய் செலவில் tantea தொழிலாளர்களுக்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியவர் பத்தாண்டு அதிமுக ஆட்சியில் tantea தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அதிமுக ஆட்சி செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.

banner

Related Stories

Related Stories