தமிழ்நாடு

அக்கா இறப்புச் செய்தியை கேட்டு தம்பியும் உயிரிழப்பு :100 வயதை கடந்து தொடர்ந்த பாசம்!

அக்கா இறப்புச் செய்தியைக் கேட்டு தம்பியும் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கா இறப்புச் செய்தியை கேட்டு தம்பியும் உயிரிழப்பு :100 வயதை கடந்து தொடர்ந்த பாசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவருக்கு 104 வயதாகிறது.

இந்நிலையில் நேற்று இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து வள்ளியம்மாள் இறப்புச் செய்தி குறித்து அவரது தம்பி துரைசாமிக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்ட அவர் ஒரே இடத்தில் அமர்ந்து சோகத்தில் இருந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே அமர்ந்திருந்த இடத்திலேயே துரை சாமி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து இறந்த வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்கள் அதே ஊரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த இவர்களுக்கு 57 பேரக் குழந்தைகள் உள்ளனர். அக்கா இறந்த அதிர்ச்சியில் தம்பி இறந்து நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories