தமிழ்நாடு

”காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மருத்துவத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்திய அளவில் மாநில அரசு நடுத்துகின்றன சர்வதேச அளவிலான முதல் மாநாடு இதுவாகும். இம்மாநாடு ஜனவரி 19 தேதி முதல் 21 தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 23 மருத்துவ சிறப்புப் பிரிவு சார்ந்த மருத்துவர்கள் கலந்துகொள்கின்றனர். தேசிய அளவிலும் சிறப்பு மருத்துவர் நிபுணர்களும் கலந்து கொள்கின்றனர்.

10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 இளங்கலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ஒன்றிய அரசின் புதிய நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தார். தற்போது முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

”காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 5000 பணியிடங்கள் ஒரு மாதத்தில் எம்.ஆர்.பி மூலம் விரைவில் நிரப்பப்படும். சித்த மருத்துவப் பல்கலைக்கழக அமைக்க வேண்டும் என்கிற தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக மாதவரம் பால்பன்னையில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அலுவல் சார்ந்த பணிகள் நிறைவடைந்தது உள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்.

அதேபோல் எம்.ஜி.ஆர் பல்கலை துணை வேந்தர் நியமனம் தொடர்பாக மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்து இருந்தார். மேலும் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு நாளை சட்டப்பேரவையில் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories