தமிழ்நாடு

தெற்கிலிருந்து ஒரு குரல் - சமூக நீதிக்கான புதுயுக போராளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : Times of India!

திராவிடச் சித்தாந்தங்களையும் – பா.ஜ.க. வை எதிர்க்க வேண்டியதையும் –டிஜிட்டல் வழியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தெற்கிலிருந்து ஒரு குரல்’ மூலம் வலியுறுத்துகிறார்.

தெற்கிலிருந்து ஒரு குரல் - சமூக நீதிக்கான புதுயுக போராளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :  Times of India!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு நேற்று (16.11.2023) வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில், திராவிடச் சித்தாந்தங்க ளையும் , பா.ஜ.க. வை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவ சியத்தையும் டிஜிட்டல் வழியே ‘தெற்கிலிருந்து ஒரு குரல்’ மூலம் வலியுறுத்தி வருகிறார், தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரு மான மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்துள்ளது.

சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் விந்திய மலைக்கு அப்பால் உள்ள எதிர்க்கட்சிகளை பா.ஜ.க.வுக்கு எதிராக ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முயன்று வருவதாக ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

‘‘விடா முயற்சி, டிஜிட்டல், திராவிடம்” என்ற தலைப்பில் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அண்மைக்காலமாக “தெற்கிலிருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில், தனது அரசியல் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில், ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதையும், ‘‘செக், செக், செக். ஒன், ட்டு, திரி , ஆரம்பிக்கலாமா? வணக்கம்,’’ எனக் குறிப்பிட்டு அவர் தனது பேச்சைத் தொடங்குவதையும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ சுட்டிக்காட்டி உள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலியில், தொடர்ந்து உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதி, தனது கட்சி ஊழியர்களுடன் பிரிக்க முடியாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் இதனைப் போல், தனது கருத்துக்களை கொண்டு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிட்டல் வழியை தேர்வு செய்துள்ளார் என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை எதிர்கொள்வதற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்குவது மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நோக்கமல்ல என்றும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட “திராவிட மாடல்” அரசியல் மூலம் சமூக நீதிக்கான – புதுயுக போராளியாக மாறி அடித்தளத்தை வளர்த்தெடுப்பதே அவரது நோக்கம் என்றும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “திராவிட நாயகன்” என அழைப்பதற்கு காரணம், “திராவிட மாடல்” ஆட்சியின் சாதனைகளை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளால்தான் என அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

திராவிடப் பெருமையை நாடறிய வேண்டும் என்கிற முயற்சியில் இந்தியாவிற்காக பேசும் ‘பாட் காஸ்ட்’ தொடரை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து, திராவிட ஆரிய வேறுபாடு குறித்து விளக்கப்படுகிறது. தி.மு.க. மீதான ‘தனி நாடு’ என்ற பிம்பத்தை மாற்றுவதே அதன் நோக்கம் என்றும் தி.மு.க.வினர் சிலர் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது PODCAST தொடரின் முதல் பதிவை “இந்தியா” கூட்டணிக்காக வெளியிட்டதையும், பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றும், அதன்தோல்விகளை மூடி மறைக்க பா.ஜ.க.மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டிதை யும் சுட்டிக்காட்டி உள்ள இக்கட்டுரை, முதலமைச்சரின் கருத்துக்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக திமுக தொழில்நுட்ப அணி சிறப்பான பணியாற்றிவருவதாக பாராட்டி உள்ளது.

தி.மு.க. வின் ஆதரவு அமைப்பான 100 க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்களிலும் ஓராண்டாக செயல்பட்டு வரும் PEN (POPULAR EMPOWERMENT NET WORK) அமைப்பும் இத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தித் திணிப்பை திமுக எதிர்ப்பதால், இந்தி பேசும் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அனைத்து மாநிலங்களுக்கும், மாநில சுயாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்துவதுமே திமுகவின் நோக்கம் என்றும் தனி நாடு அல்லது பிரிவினை என்பது தி.மு.க. வின் கொள்கை அல்ல என்பதை வலியுறுத்துவதும் எங்களின் முக்கிய நோக்கம் என்று PEN அமைப்பின் தலைவர் மணிகண்டன் வாசுதேவர் தெரிவிப்பதாகவும், ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ சுட்டிக் காட்டியுள்ளது.

“முதலமைச்சர் பல துறைகளில் திறமை உள்ளவர், கொள்கை அடிப்படையில் செயல்படக்கூடியவர், அவருக்காக எந்த புதிய தோற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை, அவர் பேசுவதே போதுமானது” எனவும், “இந்தியா முன்னேறினால் தமிழ்நாடு சிறப்பாக வளரும், வலிமையான இந்தியா தமிழ்நாட்டை மேலும் செழிப்படையச் செய்யும்” என்பதே திமுக தலைவரின் நிலைப்பாடு என்றும், திராவிடக் கொள்கைகளை நாடு முழுவதும் விரிவடையச் செய்வதும், பெண்களுக்கு சமஉரிமை, பெண் குழந்தைகளுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் சமூகநீதி வலுப்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விருப்பம் என திமுக தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாகவும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

மாநில சுயாட்சியை பலப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க. தோற்கடிப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குரல் பதிவுகளை 35 லட்சம் பேர் கேட்டுள்ளதாகவும் ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

தெற்கிலிருந்து ஒரு குரல் - சமூக நீதிக்கான புதுயுக போராளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :  Times of India!

பிரதமராகும் எண்ணம் ஒருபோதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்றும், திராவிட மாடல் நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே அவரின் ஒரே குறிக்கோள் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டார்.

‘பாட்காஸ்ட்’ மூலம் பேசுவது என்பது பல்வேறு டிஜிட்டல் முயற்சிகளின் விரிவாக்கம்தான். 2022ஆம் ஆண்டு ஜனவரியில் தி.மு.க. தலைவர் அகில இந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பினை உருவாக்கியபோது, இன்றைய ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களே பெரும்பாலும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

அதன் முதலாவது கூட்டத்தில் காணொலி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், பா.ஜ.க.வால் பட்டப்பகலில் சமூக நீதி கொல்லப்படுவதாக தெரிவித்தார்.

இந்தியாவிற்காகப் பேசும் உரைகள் நாளுக்கு நாள் அதிகம் பேர் கேட்டு வருவதாக ‘பென்’ அமைப்பு தெரிவிக்கிறது. இரண்டாம் அத்தியாயத்தில் மாநில சுயாட்சியை வலியுறுத்தியதையும், மூன்றாம் அத்தியாயத்தில் பா.ஜ.க.வை ஒட்டு மொத்த இந்தியாவில் தோற்கடித்தேயாக வேண்டும் எனக் குறிப்பிட்டதையும் அந்த அமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்தக் குரலை ஒவ்வொருவரும் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்று இந்தியாவின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக மணிகண்டன் வாசுதேவன் குறிப்பிட்டுள்ளதை ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வெளியிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் அவர்ள் பேசி முடித்தவுடன் எங்கள் பணி தொடங்கிவிடும். இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அந்த உரைகள் மாற்றப்பட்டுவிடும். யூ டியூப் மற்றும் டெலிகிராமில் நூற்றுக்கணக்கானவர்கள் எங்களை பின்பற்றி அவரது கருத்துக்களை பரப்புகின்றனர் என்று சாப்ட்வேர் பொறியாளர் விக்னேஷ் ஆனந்த் தெரிவிக்கிறார்.

‘ஸ்டாலின் பிராண்டு’ ஏற்படுத்துவதேஎங்கள் விருப்பம். கடந்த மாதம் (2.10.2023) 2–ஆம் தேதி 2000 பேர் பங்கேற்ற கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் இரண்டரை மணி நேரம் கருத்துககைளப் பரிமாறிக் கொண்டார். தொலைக்காட்சி விவாதங்களுக்கான தலைப்புகளை தேர்வு செய்வதில் ஊடகம் முக்கிய பங்காற்றுகின்றன. அதை ஏற்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories