தமிழ்நாடு

”ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

”ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்”:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் விஜயநகர மாவட்டத்திற்குட்பட்ட கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பலாசா விரைவு ரயில், ராயகடா ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டது. இதில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

பிறகு இந்த கோர விபத்து குறித்து அறிந்த உடனே மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகே இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த விபத்தில் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் ரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, "ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் கோர விபத்தை அடுத்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர், "2023 ஜூன் மாதம் பாலசோர் இரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன். பெருவாரியான இந்தியர்கள் தங்களின் பயணத்திற்காக இரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில் குறுகிய கால இடைவெளியில் விபத்துகள் தொடர்கதையாவது மிகுந்த கவலையளிக்கிறது. இரயில்வே பாதுகாப்பு முறைகளை உடனடியாக ஒன்றிய அரசு மீளாய்வு செய்து, மேம்படுத்திப் பயணிகளின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories