தமிழ்நாடு

“RN ரவி என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றிலிருந்து...” - அமைச்சர் எ.வ.வேலு கடும் விமர்சனம் !

தமிழ்நாடு அரசு நாட்டு மக்களுக்கு செயல்படுத்தும் அனைத்து திட்டத்திற்கும் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

“RN ரவி என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றிலிருந்து...” - அமைச்சர் எ.வ.வேலு கடும் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக புதியதாக வணிக வளாகம் கட்டும் கால்கோள் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை செய்லபடுத்த விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு :

"தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து பல முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். குறிப்பாக ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, மாநிலத்தில் வேறொரு கட்சி ஆட்சியில் இருப்பதால் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. ஆளுநர், ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் பாலமாக இருந்து மாநிலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தர வேண்டும்

“RN ரவி என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றிலிருந்து...” - அமைச்சர் எ.வ.வேலு கடும் விமர்சனம் !

ஆனால் மாநில அரசிற்கு இருக்கும் உரிமைகள் மற்றும் பல்வேறு திட்டங்களை கோப்புகள் முலம் பெற வேண்டும் என்றாலும், தமிழக ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி என்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றில் இருந்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய நல்லத் திட்டங்களை செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்து வருகிறார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று வியாபார பெருமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதல்வர், புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது புதிய வணிக வளாகம் கட்ட கால்கோள் விழா நடத்தப்பட்டது.

“RN ரவி என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றிலிருந்து...” - அமைச்சர் எ.வ.வேலு கடும் விமர்சனம் !

இந்து சமய அறநிலையத்துறையின் முலம் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில் தற்போது புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் 6500 சதுர அடி பரப்பளவில் 151 கடைகள் கட்டப்படவுள்ளது. குறிப்பாக ஏற்கனவே இந்த இடத்தில் கடை வைத்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு கடைகள் வழங்கப்படும்.

பல்வேறு பொதுக்கூட்டங்களில் திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது பேசியிருக்கிறோம். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தொல்லியல் துறையிடமிருந்து அண்ணாமலையார் கோயிலை மீட்டு தந்தார்.

அண்ணாமலையார் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலையில் வியாபாரம் பெருகுவது மட்டுமின்றி, தங்கும் விடுதிகள், உணவகங்கள் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது."

banner

Related Stories

Related Stories