தமிழ்நாடு

“2 புத்தகங்கள் அனுப்பியாச்சு.. அவருதான் படிக்கணும்” : அண்ணாமலையை நாக் அவுட் செய்த அமைச்சர் சேகர்பாபு!

கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக அண்ணாமலைக்கு 2 புத்தகங்கள் அனுப்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“2 புத்தகங்கள் அனுப்பியாச்சு.. அவருதான் படிக்கணும்” : அண்ணாமலையை நாக் அவுட் செய்த அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழ்நாட்டில் கோயில் சார்ந்த பல்வேறு நாலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கூட 1000-மாவது குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட வருகிறது. இந்த சூழலில் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்தும், திமுக ஆடசி குறித்தும் பிரதமர் மோடி, அண்ணாமலை விமர்சித்து வந்தனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடந்த 2 ஆண்டுகளில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் குறித்த விவரங்களை அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சூழலில் தற்போது அவருக்கு தேவையான அனைத்து விவரங்களும் அடங்கிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துக்கள் விவரம் குறித்த 2 புத்தகங்களையும் இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியுள்ளது.

“2 புத்தகங்கள் அனுப்பியாச்சு.. அவருதான் படிக்கணும்” : அண்ணாமலையை நாக் அவுட் செய்த அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 100 தட்டச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு இன்று வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படாது, பாதுகாக்கப்படாது என்ற பொய் பிரச்சாரத்தை முன்வைத்து வந்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை பொய்யாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

“2 புத்தகங்கள் அனுப்பியாச்சு.. அவருதான் படிக்கணும்” : அண்ணாமலையை நாக் அவுட் செய்த அமைச்சர் சேகர்பாபு!

இதுகுறித்து பேசிய அவர், "மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்டிருந்தார். இதற்கு வெள்ளை அறிக்கையெல்லாம் தேவையில்லை. கடந்த 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் விவரம் குறித்த முதல் பாக புத்தகம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்த புத்தகத்தின் 2-வது பாகம் வெளியிடப்பட்டது. இந்த 2 புத்தகங்களையும் அண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டோம். இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை. யார் நிலத்தை அபகரித்து வைத்திருந்தார்கள், எவ்வளவு நிலம் என்பதை விவரமாக அறிவித்துள்ளோம். யார் கேட்டாலும், இந்த புத்தகத்தை அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.

“2 புத்தகங்கள் அனுப்பியாச்சு.. அவருதான் படிக்கணும்” : அண்ணாமலையை நாக் அவுட் செய்த அமைச்சர் சேகர்பாபு!

இந்த ஆண்டு இறுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த புத்தகங்களின் 3-ம் பாகம் வெளியிடவுள்ளோம். ஆன்மீகத்தை வைத்து தான் திமுக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று பாஜக எண்ணியது. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படாது, பாதுகாக்கப்படாது என்ற பொய் பிரச்சாரத்தை பாஜகவினர் முன்வைத்து வந்தார்கள். ஆனால் இந்த பிரச்சாரத்தை பொய்யாக்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆன்மீகத்தை கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த எண்ணுகிறார்கள் அது ஒரு போதும் நடக்காது. 1000க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு, ஒருகாலை பூஜை செய்யப்படாமல் இருந்த கோவில்களில் பூஜை, திருக்கோவில் பராமரிப்பு புணரமைப்பு என அனைத்து பணிகளையும் திமுக ஆட்சி தான் செய்துள்ளது. குற்றச்சாட்டுகளை வைக்க வைக்க எங்களது பனியின் வேகம் அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறையாது" என்றார்.

banner

Related Stories

Related Stories