தமிழ்நாடு

“திமுக ஆட்சி என்பது வணிகர்களின் பொற்காலம்” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்கிரமராஜா !

வணிகர் சங்க பேரவையின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்வர் வணிகர்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சி என்பது வணிகர்களின் பொற்காலம்” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்கிரமராஜா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

“திமுக ஆட்சி என்பது வணிகர்களின் பொற்காலம்” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்கிரமராஜா !

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு அதிரடி அறிவிப்பை அறிவித்தார். இதுகுறித்து பேரவையின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பானது, "சமாதான திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்" ஆகும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நீண்ட கால கோரிக்கையை தாயுள்ளத்தோடு ஏற்று தமிழ்நாடு முதல்வர் வணிகர்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சி என்பது வணிகர்களின் பொற்காலம்” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்கிரமராஜா !

இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நீண்ட கால கோரிக்கையை தாயுள்ளத்தோடு ஏற்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வணிகர்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். 2023 தீபாவளி திருநாள் பரிசாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சோப லட்ச குடும்பங்களின் சார்பாகவும் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்த திட்டம் மூலம் ஏறக்குறைய ஒரு லட்சம் வணிகர்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு வழக்குகள் முடிவுக்கு வர இருக்கிறது. திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு இது ஒரு பொற்காலம். இந்த அறிவிப்பை அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கான வணிகர்கள் இணைந்து விரைவில் மாபெரும் பாராட்டுவிழா நடத்த இருக்கிறோம். அதற்கும் முதலமைச்சரிடம் தேதி கேட்க இருக்கிறோம்.

“திமுக ஆட்சி என்பது வணிகர்களின் பொற்காலம்” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்கிரமராஜா !

இந்த அறிவிப்பு 4 மாத காலம் நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளனர். VAT வரி என்றால் என்ன என்று தெரியாமல், வழக்குகள் இருந்த நிலையில் வணிகர்கள் என்ன செய்வது என்று தத்தளித்து இருந்த நேரத்தில் இது ஒரு சரியான தீர்ப்பாக அமைந்துள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ல் வணிகர் நல வாரியம் அமைத்தார். அது 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் தொய்வுற்று இருந்த நிலையில், மீண்டும் புதுப்பொலிவோடு இந்த துறையை முதலமைச்சர் சீரமைத்துள்ளார்.

செஸ் வரிக்கு போடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்தது திமுக அரசு தான். எல்லா வகையிலும் வணிகர்களுக்கான நல்ல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டம் என்பது வணிகர்களுக்கான தீபாவளி திருநாளுக்கான பரிசு. திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.

banner

Related Stories

Related Stories