தமிழ்நாடு

“மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி இடைநிற்றலை குறைத்து, மாணவர்கள் வருகையை அதிகரித்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

“மாணவர்களின் இடைநிற்றலை  குறைத்தது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற புதிய தலைமுறையினருக்கான டிஜிட்டல் திறன் வளர்ப்பு நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி இடைநிற்றலை குறைத்து, மாணவர்கள் வருகையை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது, “2021 ஆம் ஆண்டு வரை நமக்கு மதிய உணவு திட்டம் தான் தெரியும். நீதி கட்சி காலங்கள் முதல் எப்படி வளர்ச்சி அடைந்து வந்தது என்பது நமக்கு தெரியும் ஆனால் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஏன் வழங்க நினைத்தார் அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன.

“மாணவர்களின் இடைநிற்றலை  குறைத்தது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி இடைநிற்றலை குறைத்து, மாணவர்கள் வருகையை அதிகரித்து இருக்கிறது. இன்று காலை உணவு திட்டத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் மாணவிகள் எங்கும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மேயராக இருந்தபோது என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார். இன்று நாம் பேசும் பல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் அன்றைக்கே கொண்டு வந்து விட்டார். அது நிறைய பேருக்கு தெரிவில்லை.

நம்முடைய முதல்வர் அவர்கள் மேயராக இருந்தபோது என்ன திட்டங்களை கொண்டு வந்தார், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டங்களை கொண்டு வந்தார், துணை முதல்வராக இருந்த போது என்ன திட்டங்களை மாநிலத்துக்கு கொண்டு வந்து உள்ளார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் முதல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் எந்த திட்டங்களை கொண்டு வந்தால் வெற்றி பெறலாம் என்பதை காட்டிலும் அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் தலைவர்கள் அனைவரையும், மாணவிகள் ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, வேறு யார் யாரெல்லாம் முதல்வராக இருந்தார்களோ, அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அது மாணவ மாணவிகளுக்கு உதவும்.

“மாணவர்களின் இடைநிற்றலை  குறைத்தது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்றால், எப்போது பொதுத் தேர்வு என்று ஊடகத்திற்கு முன்பு வந்து சொல்லிவிட்டு செல்வது மட்டும் கிடையாது. வேறு என்ன செய்யலாம் என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் ஆய்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்து கொண்டிருக்கிறது. 70 தொகுதியில் ஆய்வை முடித்து விட்டேன், இன்னும் சில தொகுதிகள் உள்ளது. விரைவில் அதிலும் ஆய்வு செய்து முடிப்பேன். அதை செய்வதற்கு காரணம் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மட்டுமே.

ஒன்றிய அரசு உயர்கல்வி செல்வதை 50% கொண்டு வர வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. எப்போது என்று பார்த்தால் அது 2035ல். ஆனால் உயர்கல்வியில் தமிழ்நாடு 51.4 ஏற்கனவே தொட்டுவிட்டோம். இது உடனடியாக 10, 20 வருடத்தில் வந்தது கிடையாது. 1969 காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை அரசு மற்றும் தனியார் என 68 தான் இருந்தது, அதற்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராகிறார், அப்போது 109 கல்லூரிகளை கொண்டு வந்தார். அதனால் தற்போது உயர்கல்வியில் 51.4 சதவீதத்தை தமிழ்நாடு கடந்திருக்கிறது.

“மாணவர்களின் இடைநிற்றலை  குறைத்தது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் !

சமூக வலைதளங்களில் நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. அதை நம் தேவைக்கு ஏற்பார் போல் நல்லவிதமாக மாணவ, மாணவிகள் பயன்படுத்த வேண்டும். அதை முறையாக பயன்படுத்த வேண்டியது இன்றைய தலைமுறையின் கடமையாக உள்ளது. சினிமா முதல் தேர்தல் வரை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் காலமாக மாறி இருக்கிறது.

கலைஞர் போன்ற தலைவர் நமக்கான திட்டங்களை திட்டவில்லை என்றால் ராமநாதபுரத்தில் ஏதோ ஒரு மூலையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்திருப்பேன் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு நபர் சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவர் சொல்லும் பொழுது இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு நபராக நாம் பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கல்வியும் மருத்துவமும் எனது இரு கண்கள் என்று கூறுகிறார். அதை ஒவ்வொரு காலத்திற்கு ஏற்பார் போல் கொண்டு செல்ல நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் மாணவர்கள் நிறைய யோசியுங்கள், முதல்வரின் 2030ஆம் ஆண்டு ஒன் டிரிலியன் பொருளாதாரம் தொடுவதற்கு உங்களைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும்" என்றார்.

banner

Related Stories

Related Stories