இந்தியா

இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!

இந்தியாவை உலக அரங்கிற்கு காட்சிப்படுத்துவதாக, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, 10 ஆண்டுகால ஆட்சியின் இறுதியில் அவப்பெயரை தான் தேடித் தந்திருக்கிறார்.

இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மக்கள் தொகை அதிகரிப்பினாலும், மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளாலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்க,

அதற்கு, மோடியின் ஆட்சி தான் காரணம் என தெரிவிக்கும் பா.ஜ.க.வினரின் முகங்களில், உலக நிறுவனங்களும், அரசுகளும் தொடர்ந்து கரியை பூசி வருகின்றனர்.

அவ்வகையில், தனிமனித பாதுகாப்பில் சிதைவை உண்டாக்க விரும்பும் ஒன்றிய பா.ஜ.க.வின் செயலை கண்டித்து, Whatsapp - இந்தியாவை விட்டு வெளியேற எச்சரிக்கை விடுத்து சில நாட்களே கடந்த நிலையில்,

எலன் மஸ்கின் இந்தியா வருகையில் தாமதம் ஏற்பட்டிருப்பது, இந்திய அரசின் மீது உலக நிறுவனங்கள் வைத்துள்ள அவநம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளது.


இது குறித்து, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், “டெஸ்லா குழும நிறுவனர் எலன் மஸ்க், சீன பிரதமர் மீது வைத்திருக்கிற உறுதிப்பாடு கூட, இந்திய பிரதமர் மோடி மீது வைக்கவில்லை.

இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!

அதன் காரணமாகவே, எலன் மஸ்கின் இந்தியா வருகை தள்ளிப்போகியுள்ளது. பொது வெளியில் ஒன்றிய அரசு, வலிமையான அரசு என காட்டிக்கொள்ளும் மோடி, உள்ளுக்குள் புகைவதை மறைத்து வருகிறார்.

ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மதிப்பானது ஏறக்குறைய ஒரேமாதிரி அளவாக உள்ளது. 2004-ல் இந்தியா GDP வளர்ச்சியில் 12-வது இடத்தில் இருந்தது. பின்னர் 2014-ல் ஏழாவது இடத்துக்கு முன்னேறியது. 2024-ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே யார் பிரதமரானாலும் இந்தியா 3-வது பொருளாதார நாடாவதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, சர்வாதிகாரத்தன்மையின் வெளிப்பாட்டால், இந்தியாவிற்கு வர இருக்கும் முதலீடுகளை தடுப்பதும், இருக்கின்ற உலக நிறுவனங்களை நாட்டை விட்டு வெளிநடப்பு செய்ய தூண்டுவதுமான வேலைகளை செய்யும் மோடியும், மோடி அரசும், நடப்பாண்டில் ஆட்சியிலிருந்து வெளியேறும் என்ற உறுதிபாட்டில் மக்கள் நிலைகொண்டிருப்பது, நடந்து வரும் மக்களவை தேர்தல் கணிப்புகளில் வெளிப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories