இந்தியா

பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !

பிரபல Youtuber துருவ் ரதி குறித்து இணையத்தில் போலி செய்தி பரவி வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக ஆட்சி செய்த ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்களில் மட்டுமே பாஜக ஈடுபட்டு வந்தது. இதனை பலரும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல Youtuber துருவ் ரதி என்பவரும் பாஜகவின் வண்டவாளத்தை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

அண்மையில் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுகுறித்து பாஜகவின் ஊழலை வெளிப்படுத்தி வந்தனர். அதில் துருவ் ரதியும் ஒருவர். இவர் பாஜகவின் ஒட்டுமொத்த தேர்தல் பத்திர ஊழல் குறித்து அம்பலப்படுத்தியிருந்தார். இவரது வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலானாது. இதைத்தொடர்ந்து மேலும் பாஜக அரசின் கொடுமைகள் குறித்தும் வீடியோ மற்றும் கருத்தை பதிவிட்டு வருகிறார்.

பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !

இந்த நிலையில், இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று பாஜகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இவர் மட்டுமின்றி, இவரது மனைவி அவரது குடும்பத்தினர் என அனைவரையும் பற்றி பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் போலியான செய்தி ஒன்றை பரப்பி வருகின்றனர். அதோடு, இவரது உண்மையான பெயர் பத்ரு ரஷீத் என்றும், இவர் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர் என்றும் போலியான செய்தி பரவி வருகிறது.

மேலும் இவரது மனைவியின் பெயர் சுலைக்கா என்றும், இவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் இராணுவம் பாதுகாப்பு வழங்கியது என்றும், இவர்கள் குடும்பமே பாகிஸ்தான் என்றும் போலியான செய்தியை பரப்பி வருகிறது. இந்த போலி செய்திக்கு தற்போது துருவ் ரதியே கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நான் இதுவரை பதிவிட்ட வீடியோக்களுக்கு பாஜகவிடம் பதில் இல்லை. இதனாலே என்னை பற்றியும், எனது மனைவி, குடும்பத்தை பற்றியும் போலியாக அவதூறு பரப்பரப்படுகிறது. இந்த கேவலமான செயல் மூலம் நீங்கள் (பாஜகவினர்) எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. " என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே பாஜக குறித்த உண்மையை வெளிப்படுத்தினால், அவர்கள் மீதும் அவர்கள் குடும்பம் மீதும் பாஜக வீணாக அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்து வருகிறது. குறிப்பாக அவர்கள் மீது மதச்சாயம் பூசும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது. அதில் தற்போது துருவ் ரதியும் அடங்குவார். துருவ் ரதி குறித்த அவதூறு செய்திக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories