இந்தியா

“மோடி அரசின் சர்வாதிகாரம் இதுதான்..” : பா.ஜ.க-வின் அட்டூழியங்களை அம்பலமாக்கிய யூடியூபர் - வைரல் வீடியோ!

காணொலி வெளியான ஒரே நாளில் 58 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களோடு, உலக அளவில் வைரலாகி வருகிறது.

“மோடி அரசின் சர்வாதிகாரம் இதுதான்..” : பா.ஜ.க-வின் அட்டூழியங்களை அம்பலமாக்கிய யூடியூபர் - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடி தலைமையிலான 10 ஆண்டுகள் ஆட்சி இந்தாண்டோடு முடிகிறது. பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்தே சிறுபான்மையினர், தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது.

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒன்றிய அரசுக்கு எதிரான தனது கருத்தியல் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துள்ள சம்பவம் சமீபகாலங்களில் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் மூலம் காணலாம்.

மேலும் 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மோடி அரசு செய்யும் எதேச்சதிகார நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும் எழுந்து வருகிறது. அந்த கண்டனங்களை பல்வேறு தளங்களில் நாட்டு மக்கள் வெளிக்காட்டி வருகின்றனர். அந்தவகையில், பிரபல யூடியூபர் துருவ் ரத்தே சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியமைக்கும் கட்டமைப்புடைய ஒரு நாட்டில், சர்வாதிகாரம் எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு பா.ஜ.க.வின் ஆட்சி என்று தெளிவாக உணர்த்தியிருக்கிறது துருவ் ரத்தேவின் காணொலி.

மூட நம்பிக்கைகளில் மூழ்கி போனவர்கள், மோடியை கடவுளாக பார்க்க தயங்குவதில்லை. அதற்கு பிரபல நடிகையான கங்கனா ரனாவத்தும் விலக்கில்லை. மோடி என்ற மாயையை உருவாக்கி ஒரு நாட்டையே அடிமைப்படுத்தும் நோக்கில் மோடியின் பா.ஜ.க அரசு செயல்படுகிறது என்று அக்காணொலி தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து, ஒரே நாடு - ஒரே கட்சி என்ற எண்ணத்தோடு, ஊடகத்தை கையில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளின் குரல்வலைகள் மறைக்கப்படுகின்றன; சூதாட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் கவிழ்க்கப்படுகின்றன; ஒன்றிய அரசின் விசாரணைக் குழுக்கள் அரசியல் கட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.

“மோடி அரசின் சர்வாதிகாரம் இதுதான்..” : பா.ஜ.க-வின் அட்டூழியங்களை அம்பலமாக்கிய யூடியூபர் - வைரல் வீடியோ!

ED, CBI கொண்டு எதிர்கட்சிகளின் தலைவர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்கிறது; மாநில உரிமைகள் சூரையாடப்படுகின்றன; மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் வைக்கப்படுகின்றன; மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன; விவசாயிகளுக்கு எதிரான வன்முறை தூண்டப்படுகின்றன போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் மோடியின் சர்வாதிகாரத்திற்கு சான்றாக அமைந்துள்ளன என்பதனை ஆய்வுகளுடன் அந்த காணொலியில் தெரிவித்துள்ளார் துருவ் ரத்தே.

இதனை ஆதரிக்கும் வகையில் அந்த காணொலி சுமார் 58 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதற்கு 6 லட்சம் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்து, 1.2 இலட்சம் பேர் கமெண்ட்டும் (Comment) செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இது பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories